புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

யாரும் எதிர்பார்க்காத கூட்டணியில் தளபதி 68.. அஜித் வெற்றி இயக்குனரை தட்டி தூக்கிய விஜய்

லோகேஷ், விஜய் கூட்டணியில் தளபதி 67 வது படமான லியோ படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படம் வருகின்ற அக்டோபர் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக விஜய்யின் 68வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பேச்சு சில மாதங்களாகவே அடிப்பட்டு வருகிறது.

அதில் பெரும்பாலானோர் அட்லி தான் தளபதி 68 படத்தை இயக்க உள்ளதாக கூறி வந்தனர். ஏனென்றால் ஏற்கனவே விஜய்க்கு தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் படங்களை அட்லி கொடுத்திருந்தார். அதுமட்டும்இன்றி விஜய், அட்லி இருவருமே ஒரு சகோதரர்கள் போல பழகி வருகிறார்கள்.

Also Read : தளபதியை வைத்து டிஆர்பியை ஏற்றிய சன் டிவி.. கோட்டை விட்ட விஜய் டிவி

மேலும் அட்லி தற்போது இயக்கி வரும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகிவிட்டது. ஆகையால் அடுத்ததாக விஜய்யின் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் படத்தின் இயக்குனரை லாக் செய்துள்ளாராம் விஜய். அதாவது அஜித்துக்கு மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் வெங்கட் பிரபு.

இவர் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையை பல மேடைகளில் கூறி உள்ளார். இந்த சூழலில் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறாராம். அதுவும் இந்த படத்திற்கு யுவன் இசை அமைக்க உள்ளாராம். வெங்கட் பிரபு, யுவன் காம்போவில் வெளியான படங்கள் எப்போதுமே பெரிய அளவில் பேசப்படும்.

Also Read : உனக்கு 8 எனக்கு 18.. வாயடைக்க வைத்த விஜய் பட ஹீரோயினின் காதல்

மேலும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் ட்விட்டரில் தளபதி 68 என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால் இந்தக் கூட்டணி உறுதி செய்யப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஏனென்றால் மாநாடு என்ற பிளாக்பஸ்டர் படத்தை சிம்புக்கு வெங்கட் பிரபு கொடுத்திருந்தார். ஆனால் அதன்பிறகு சமீபத்தில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்றதுடன் வசூலிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும் சூழலில் விஜய் எப்படி தனது படத்தை வெங்கட் பிரபுக்கு கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read : பார்த்திபனாக மாறிய விஜய்.. இணையத்தில் லீக்கான லியோ சீக்ரெட்

- Advertisement -

Trending News