தொகுப்பாளிகளில் கில்லாடியாக ஜெயித்துக் காட்டிய 6 பேர்.. விஜய் டிவியை மொத்தமாக குத்தகை எடுத்த பிரியங்கா!

எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் அதிக அளவில் வெற்றிகரமாக கொண்டு போவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த ப்ரோக்ராமை தொகுத்து வழங்குபவர்கள் தான். அப்படிப்பட்ட ஆங்கர் தான் அந்த நிகழ்ச்சியின் தூண்களாகவே இருந்து அதை வழி நடத்துபவர்கள். அந்த தொகுப்பாளினிகள் யார் என்று கேட்டால் நம்முடைய ஞாபகத்துக்கு இவர்கள் பெயர் கண்டிப்பாக வரும். அப்படிப்பட்டவர்களை பற்றி பார்க்கலாம்.

அர்ச்சனா: நம்முடைய தமிழ் மக்களுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆங்கர் லிஸ்டில் இவங்க பெயர் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் என்றே சொல்லலாம். இவர் எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் மற்றும் குட் எனர்ஜியுடன் இருப்பவர். அத்துடன் இவரை சுற்றி இருப்பவர்களையும் இதே மாதிரி சிரிச்ச முகத்துடன் பழகக்கூடியவர் தான் நம்முடைய அர்ச்சனா. இவரை சிலபேர் பாசமாக அச்சுமா என்றும் கூப்பிடுவார்கள். எந்த லெவலுக்கும் இறங்கி கவுண்டர் கொடுப்பதில் மிகப்பெரிய திறமைசாலி. இப்பொழுது இவர் மட்டும் இல்லை இவருடைய மகளும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஜாக்குலின் : நம்ம அனைவருக்குமே விஜய் டிவி ஜாக்குலின் என்றால் நல்லாவே தெரியும். ஒரு ஆங்கரா இருக்கணும்னா கண்டிப்பா அவருக்கு முக்கியமாக இருக்க வேண்டியது அவருடைய குரல் மட்டும் தான். ஆனால் அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை திறமை இருந்தால் மட்டும் போதும் என்று நிரூபித்தவர் தான் ஜாக்குலின். இவரை அதிக அளவில் கிண்டலடித்து பல சூழலில் ஒதுக்கப்பட்டிருக்கிறார். அதற்கு இவருடைய குரல் என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த வாய்ஸ் தான் இப்பொழுது இவர் தொகுப்பாளினியாக இருப்பதற்கு காரணம். இவர் இல்லை என்றால் கலக்கப்போவது யாரு ப்ரோக்ராமே கிடையாது என்ற அளவுக்கு இவர் ஆகிவிட்டார்.

Also read: வளர்வதற்கு முன்னரே இவ்வளவு திமிரா.. சிவாங்கி நடந்து கொள்வதை பார்த்து கடும் எரிச்சலில் படக்குழு

டிடி: ஆரம்பத்தில் இருந்து எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து போராட்டங்களை கடந்து ஒரு தொகுப்பாளினிக்கும் தனி இடம் இருக்கிறது என்று காட்டியவர் நம்ம டிடி தான். மிகவும் பிரபலமான ஒரு ஆங்கர் என்றால் இவரை சொல்லலாம். முக்கியமாக எல்லா முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் ரொம்பவே நெருங்கிய பிடித்தமான ஆங்கர் என்றால் இவராகத்தான் இருக்க முடியும். இவருடைய கல்யாணத்துக்கு பிறகு இவரது கணவர் மீடியா வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் யாருக்காகவும் என் கேரியரை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறினார். அதற்காகவே இவருடைய கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி விட்டார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு புன்னகையுடனே தொகுத்து வழங்குவதில் மிகப்பெரிய கில்லாடி. இவரை ரோல் மாடலாக வைத்து பலரும் ஆங்கராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

பாவனா: இவருடைய மிகப்பெரிய பலமே இவருடைய உச்சரிப்பு தான். இவரிடம் பன்முகத் திறமை இருக்கிறது. அதாவது டான்ஸ், பாட்டு பாடுவது, பரதநாட்டியம் மற்றும் பேச்சுத் திறமை என்று இவரிடம் இல்லாத திறமைகளை இல்லை என்று சொல்லலாம். இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக மிகவும் பிரபலமானார். தொகுப்பாளனி என்று சொன்னாலே இவர் ஞாபகம் நமக்கு கண்டிப்பாக வந்து போகும்.

Also read: விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த சிவகார்த்திகேயன்? முதல் படமே 3 பாகமாம்!

பிரியங்கா: இவரைப் பற்றி தெரியாதவர்கள் இப்பொழுது யாரும் கிடையாது அந்த அளவுக்கு எல்லாரும் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார். இவருடைய மிகப்பெரிய பிளஸ் மற்றவர்களை கிண்டலியடிப்பது விட, மற்றவர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் சிரிச்ச முகத்துடனே தொடச்சு போட்டு போகக் கூடிய ஒரு டேக் இட் ஈஸியான தொகுப்பாளனி. பொதுவாகவே இவர் எந்த ப்ரோக்ராம் பண்ணினாலும் அதில் அதிக நேரம் இவருடைய காமெடிக்கு மட்டுமே முழுபோக்கஸ் ஆக அந்த நிகழ்ச்சி மாறிவிடும். இவரைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லிக்கிட்டே போகலாம். அந்த அளவுக்கு இப்பொழுது இவர்தான் விஜய் டிவியை ஆக்கிரமித்து வருகிறார்.

விஜே ரம்யா: விஜய் டிவியில் ஆங்கர் ஆக இருந்து திறமையாக முன்னுக்கு வந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் விஜே ரம்யா. டிடி என்றால் நயன்தாராவுக்கு ஆங்கர் என்று சொல்வதை போல இவர் சமந்தாவின் பேவரிட் ஆங்கராக இருக்கிறார். நம்மிடம் வந்து தொகுப்பாளினை யாரெல்லாம் உங்களுக்கு தெரியும் என்று கேட்டால் அதில் இவர் பெயரும் இடம் பெறும் அந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறார்.

Also read: விஜய் டிவி புகழுக்கு இது இரண்டாவது திருமணமா.? ஆதாரத்தோடு அம்பலமான உண்மை

- Advertisement -