சிவகுமார் குடும்பத்தையே வச்சு செய்த வெங்கட்பிரபு.. ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி

இயக்குனர் வெங்கட்பிரபு முதல் படத்திலேயே பல புதுமுக நடிகர்களை வைத்து சென்னை 600028 என்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தார். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் 15 வருடம் கடந்த வெங்கட் பிரபுவின் திரை வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

அதில் தனது சென்னை 600028 படத்தை தயாரித்த எஸ்பிபிக்கும் அவரது மகன் சரணுக்கு முதலாவதாக நன்றி தெரிவித்திருந்தார். மேலும் தன்னுடன் துணைநின்ற தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நண்பர்கள், ஊடகங்கள் என அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் வெங்கட் பிரபு.

இந்தப் பதிவுக்கு கீழ் பல கமெண்டுகளை ரசிகர்கள் போட்டு இருந்தனர். வெங்கட் பிரபு அஜித்தை வில்லன் ரோலில் நடிக்க வைத்து மங்காத்தா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து இருந்தார். அதேபோல் ஒரு பிளாக்பஸ்டர் படத்திற்காக காத்திருந்த சிம்புக்கு மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

மாநாடு படத்தைத் தொடர்ந்து தற்போது சிம்புவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. ஆனால் நடிகர் சிவகுமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருக்கும் படு மொக்கையான படத்தை கொடுத்துள்ளார். அதாவது சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். அதேபோல் கார்த்தி நடிப்பில் வெளியான பிரியாணி என்ற படத்தையும் வெங்கட்பிரபு தான் எடுத்திருந்தார்.

ஆனால் இந்த இரண்டுமே படு ப்ளாப் ஆன படங்கள். இந்நிலையில் அந்த கமெண்டில் ரசிகர் ஒருவர், உங்கள் இயக்கத்தில் வெளியான மிகவும் மோசமான படம் மாஸ், சூர்யா ரசிகரான எனக்கே அந்த படம் பிடிக்கவில்லை என பதிவிட்டிருந்தார். அதற்கு வெங்கட் பிரபு அடுத்த முறை சூர்யா அண்ணாவின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

மேலும் மாஸ் படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என வெங்கட் பிரபு குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் மாஸ் ஹீரோவான சூர்யாவையும், கார்த்தியையும் வெங்கட் பிரபு வச்சி செய்துள்ளார் என ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் மீண்டும் இவர்களது கூட்டணியில் படம் உருவாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story

- Advertisement -