ஃபெயிலியர் ஹீரோ என சூர்யா அடி வாங்கிய 5 படங்கள்.. நடிப்பை கற்றுக்கொண்டு எடுத்த விஸ்வரூபம்..!

Tamil actor Surya’s flop movies: விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்று வெற்றிப் படிகளில் ஏறி வரும் சூர்யாவின் ஆரம்ப காலமானது பல சறுக்கல்கள் நிறைந்ததாக இருந்தது. சிவக்குமாரின் மகனுக்கு நடிப்பு வரவில்லை, நடனம் வரவில்லை என பல எதிர்மறையான விமர்சனங்களை நேர்கொண்டார்.

சிவகுமாரின் மகன் என அறிமுகத்தோடு 1997 வெளிவந்த நேருக்கு நேர்  இல் சூர்யா மற்றும் விஜய் இணைந்து நடித்திருந்தனர். இரண்டு ஹீரோஸ் சப்ஜெக்ட் என்பதால் சூர்யாவுக்கு கொஞ்சம் அழுத்தம் குறைவாக கொடுத்திருந்தனர் மற்றும் பாடல் முழுவதும் நடிகையின் பின்னால் ஓடவிட்டு கேலி செய்யும் படி விட்டுவிட்டார் இயக்குனர்

அடுத்த ஆண்டு வெளிவந்த காதலே நிம்மதியோ மறுபடியும் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட். விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி என்று தேவாவின் இசையில் முரளியுடன் இணைந்து நடித்த சூர்யா, செய்யாத தப்புக்கு அடிவாங்கி இரக்கத்தை சம்பாதித்து இருப்பாரே தவிர பெயரை சம்பாதிக்கவில்லை. காதலே நிம்மதி அவரை நிம்மதி இல்லாமல் ஆக்கியது.

1998 இல் வெளிவந்த சந்திப்போமா திரைப்படம் சூர்யா நடித்த முதல் சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட். இப்படத்தில் பிரீத்தா விஜயகுமார் அறிமுகம் செய்யப்பட்டார். காதல், சூசைட் என ஏற்கனவே தெரிந்த மசாலா படமாக இருந்ததினால் படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக எடுபடவில்லை

Also read: 1000 கோடி வசூலை எதிர்பார்த்து வெளிவர உள்ள பிரம்மாண்டமான 6 படங்கள.. கங்குவாவை மிஞ்சுமா காந்தாரா!

தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், ஃபிரண்ட்ஸ், நந்தா என ஹிட்டு அடிக்க ஆரம்பித்த சூர்யா மீண்டும் புஷ்பவாசகன்
இயக்கத்தில் 2002வெளிவந்த ஸ்ரீ இல் கொஞ்சம் சறுக்கினார் சூர்யா. தந்தை வெறுக்கும் தனயனாக நடித்திருந்தார்.  இப்படத்தின் கதை பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியை தழுவியது

கொஞ்சம் சுதாரித்த சூர்யா தன்னை மெருகேற்றிக் கொண்டு காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து என பிளாக் பஸ்டர் ஹிட் களை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் ஜோதிகாவுடன் கிசு கிசுக்கப்பட்டார். அதே நேரத்தில் சூர்யா ஜோதிகா இருவரும் நடித்த மாயாவியை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கதையின் வலுவற்ற தன்மை காரணமாக மாயாவி  வெற்றி பெறாமல் மாயமாகிவிட்டார்.

தொடக்கத்தில் நடிப்பு நடனம் என சறுக்கியிருந்தாலும் எதிர் வந்த அத்தனை விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கி  வித்தியாசமான கதை அம்சத்துடன் மாறுபட்ட வேடங்களில் நடித்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார் சூர்யா.

Also read: சூர்யாவின் நடிப்பை பார்க்க மாறுவேடத்தில் சென்ற ரஜினி.. அப்படி என்ன சூப்பர் ஹிட் படம் அது?