ஜெனியை வம்பு இழுக்கும் சூனியக்கார பாட்டி.. செழியன் போட்ட சத்தத்தில் அடங்கி போகும் கோபி, மாமி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா இதுவரை செய்த விஷயங்களில் இதுதான் உருப்படியான விஷயம் என்று சொல்வதற்கு ஏற்ப செழியன் வாழ்க்கையில் பிரகாசத்தை ஏற்படுத்தி விட்டார். அந்த வகையில் செழியன் மற்றும் ஜெனி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மறுபடியும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து பாக்யா, ஜெனியை என்னுடன் வீட்டிற்கு கூட்டிட்டு போகிறேன் என்று ஜெனி அம்மாவிடம் சொல்கிறார். அதற்கு அவர் வீட்டில் வந்து ஜோசப் கிட்ட சொல்லிட்டு முறைப்படி கூட்டிட்டு போங்கள் என்று சொல்லிவிடுகிறார். உடனே அனைவரும் சேர்ந்து ஜெனியின் அப்பா வீட்டிற்கு போகிறார்கள்.

அங்கே போனதும் செழியன் மற்றும் பாக்யாவை பார்த்ததும் வழக்கம் போல் ஜோசப் சண்டைக்கு போகிறார். பிறகு அதே காரில் ஜெனி இறங்கி வந்ததை பார்த்ததும் கொஞ்சம் அடங்கி விட்டார். பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி நான் என்னுடைய மருமகளை வீட்டிற்கு கூட்டிட்டு போகிறேன் என்று பாக்யா கூறுகிறார்.

ஆரம்பத்தில் ஓவராக கத்திக் கொண்டிருந்த ஜோசப், கடைசியில் ஜெனி எடுத்த முடிவை மறுக்க முடியாமல் எதுவும் சொல்லாமல் உள்ளே போய்விடுகிறார். பிறகு இவர்கள் அனைவரையும் பாக்யா வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அதே மாதிரி மாமியாரும் கோபியும் எங்கே போனாய் என்று கேட்கும் பொழுது, கொஞ்சம் பொறுங்கள் நான் சொல்கிறேன் என்று சொல்லி ஆரத்தி எடுத்துட்டு வருகிறார்.

உடனே மாமனார் என்ன பாக்யா ஆரத்தி எடுத்துட்டு எங்கே போகிறாய் என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா அனைவரும் கொஞ்சம் வெளியிலே வந்து பாருங்கள் என்று கூட்டிட்டு போகிறார். அங்கே போய் பார்த்தால் செழியன் ஜெனி குழந்தை அனைவரும் வாசலில் நிற்பதை பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறார்கள்.

வக்காலத்து வாங்கிய செழியன்

அத்துடன் இவர்களை பார்த்த சந்தோஷத்தில் தாத்தா மட்டும் இருக்கிறார். அதே நேரத்தில் கோபியும் மாமியார் மூஞ்சிலும் ஈ ஆடல. என்னடா மறுபடியும் இந்த விஷயத்துல பாக்கியா ஜெயித்து விட்டால் என்ற நினைப்பு மட்டும் தான் கோபிக்கு இருக்கிறதே தவிர பையன் வாழ்க்கையில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டு விட்டதே என்று தோன்றவில்லை.

மேலும் செனியை பார்த்ததும் ஈஸ்வரி வழக்கம்போல் ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டுகிறார். ஆனால் எந்த விதத்திலும் நான் இனி ஜெனியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பதற்கு ஏற்ப செழியன் பாட்டியையும் கோபியையும் அடக்கி விடுகிறார். இதனை தொடர்ந்து ஒரு வழியாக பாக்யாவின் குடும்பத்தில் எல்லா பிரச்சினையும் சரியாகி விட்டது.

இனி கோபியும் ராதிகாவும் பெட்டி படுக்கையை எடுத்து கிளம்ப வேண்டியதுதான். இன்னும் என் மகன் என் கூட தான் இருக்கணும் என்று பாக்யாவின் மாமியார் ஆர்ப்பாட்டம் பண்ணினால் அவரையும் சேர்ந்து மூட்டை முடிச்சு கட்டி அனுப்பி விட வேண்டியது தான்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்