குணசேகரன் ஆரம்பிக்கும் தில்லாலங்கடி வேலை.. மொத்த குடும்பமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிலைமை

தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற அனைத்து தொலைக்காட்சி தொடர்களிலும் ஒரு பெண்ணைத்தான் வில்லியாக சித்தரித்து கதையை கொண்டு வருகிறார்கள். ஆனால் எதிர்நீச்சலில் ஆதி குணசேகரனின் வில்லத்தனமான கேரக்டரில் இந்த மாதிரியும் பல இடங்களில் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டி அதனால் அவஸ்தைப்படும் பெண்களின் நிலைமையை எடுத்துச் சொல்லும் விதமாக இத்தொடர் அமைகிறது. ஆரம்பத்திலிருந்து ஆதிரை, எஸ்கேஆர் தம்பியை காதலிப்பது குணசேகரனுக்கு பிடிக்கவில்லை.

இருப்பினும் அப்பத்தாவின் சொத்துக்காக சம்மதித்து நிச்சயதார்த்தம் வரை சென்று அரசு கேட்ட கம்பெனியை கதிர் கையெழுத்து போட வைத்தார். அத்துடன் குணசேகரன் எதிர்பார்த்தபடி சொத்தையும் ஆட்டையை போட்டு விட்டார். ஆனால் இதன் பிறகு தான் இவருடைய தில்லாலங்கடி வேலையை ஆரம்பிக்கிறார். அதாவது கதிரை தனியாக அழைத்து வந்து அவரை ஆல்கஹால் கொடுத்து குடிக்க வைக்கிறார். பிறகு குணசேகரன் மற்றும் கதிர் மருத்துவமனைக்கு போகிறார்கள்.

Also read: ஜெயித்து விட்டோம் என்ற மமதையில் குணசேகரன்.. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அப்பத்தா

அங்கே ஆடிட்டர் இவருக்காக வெயிட் பண்ணுகிறார். பிறகு குணசேகரன் ஆடிட்டரிடம் எல்லாம் சரியாக ரெடியா இருக்கிறதா. எந்த பிரச்சனையும் வராது என்று கேட்டுவிட்டு கதிரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு போகிறார்கள். பிறகு அங்கே கதிருக்கு ஆல்கஹால் டெஸ்ட் எடுக்கப் போகிறார்கள். இது எதற்கு என்றால் ஆல்கஹால் டெஸ்ட் எடுத்த பிறகு அதற்கான சர்டிபிகேட்டை நிச்சயதார்த்தம் நடந்த தேதியில் மாற்றி வாங்கிக்கொண்டு பிரச்சனை செய்யப் போகிறார்.

அதாவது போதையில் இருக்கும் பொழுது கதிர் கம்பெனியை எழுதிக் கொடுத்த சொத்து பத்திரம் செல்லுபடி ஆகாது என்று சொல்லி அரசு விடம் கொடுத்த சொத்தை திரும்ப வாங்குவதற்கு இந்த மாதிரி பிளான் பண்ணப் போகிறார். இதனால் எஸ்கேஆர் குடும்பமும் இவரிடம் சம்பந்தம் வைக்காமல் விலகி விடுவார்கள். பிறகு இவர் எதிர்பார்த்தபடி ஆதிரை திருமணம் கரிகாலன் கூட நடக்க இருக்கிறது. ஏன் இந்த மாதிரி நிச்சயதார்த்தம் வரை வந்த பிறகு இப்படி செய்கிறார் என்றால் அப்பதான் அப்பத்தாவின் சொத்து இவருக்கு கிடைக்கும் என்பதால் இவ்வளவு நாள் அமைதியாக இருந்து காய் நகர்த்தி வந்திருக்கிறார்.

Also read: ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

இப்பொழுது அவர் எதிர்பார்த்த சொத்து அவரிடம் வந்து விட்டதால் அந்த நிச்சயதார்த்தத்தை செல்லுபடி ஆகாமல் செய்கிறார். இன்னொரு பக்கம் ஜனனி அப்பத்தாவின் இந்த நிலைமைக்கு காரணம் குணசேகரன் என்று அவரை கிழித்து தொங்க விட்டு இருக்கிறார். இந்நிலையில் இவருடைய கோல்மால் வேலையை ஜனனி தெரிந்து கொண்டால் அப்பொழுதுதான் பெரிய பூகம்பமே நடக்கப் போகிறது. இவருக்கு சப்போர்ட்டாக ரேணுகா, நந்தினி மற்றும் ஈஸ்வரியும் கைகோர்க்க இருக்கிறார்கள்.

ஆனாலும் கதை எப்படி போகுது என்றால் அப்பத்தா இருக்கும் ஆஸ்பத்திரிக்கு குணசேகரன் கதிர் வந்திருக்கிறார்கள். அப்படி என்றால் இவங்க பண்ற வேலைகளை ஜனனி கண்டிப்பாக கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் குணசேகரன் திட்டப்படி ஆதிரை கல்யாணம் நடக்க இருக்கிறதா அல்லது ஜனனி குணசேகரனுக்கு சவால் விடும் விதமாக ஆதிரை அருண் திருமணத்தை நடத்தி வைக்க போகிறாரா என்பது தான் நாளை வருகிற ஒன் ஹவர் எபிசோடில் ஒலிபரப்ப இருக்கிறார்கள். ஆனாலும் நமக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்த ஆதிரைக்கு இப்படி ஒரு திருமணம் தேவையா என்று நினைக்க வைக்கிறது. ஏன் என்றால் குணசேகரனின் புத்தி தான் ஆதிரைக்கும் இருக்கிறது.

Also read: சக்காளத்தி சண்டையை தொடங்கி வைத்த ராதிகா.. உருள போகும் கோபியின் தலை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்