குணசேகரனுக்கு எதிரான சூழ்ச்சியில் ஒட்டுமொத்த குடும்பம்.. அல்லக்கை கதிருக்கு சரியான ஆப்பு வைக்கும் ஜனனி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் புது புது திருப்பங்களால் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகர்ந்து வருகிறது. கதிர் செஞ்ச மட்டமான வேலைக்கு என்னமோ குணசேகரன் வந்தால் நியாயம் கிடைக்கும் என்பது போல் ஒட்டு மொத்த குடும்பமும் குணசேகரன் வந்த பிறகு சொன்னார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது முட்டாள்தனம் என்று நிரூபித்து காட்டி விட்டார் குணசேகரன்.

இவர் கதிருக்கு தான் சப்போர்ட் செய்து பேசுகிறார். அதனால் தான் என்னமோ அண்ணன் நிற்கும் தைரியத்தில் எல்லையை மீறி நடந்து கொள்கிறார் கதிர். குணசேகரணையை எப்படி அடக்குவது என்று தெரிய போராட்டமாக இருக்கிறது இதற்கு இடையில் இவரை ஓவர் டெக் பண்ணும் அளவிற்கு அட்டூழியத்தை செய்து வருகிறார். இவருக்கும் சேர்த்து சரியான பதிலடி கொடுக்க நினைக்கிறார் ஜனனி. ஆக மொத்தத்துல குணசேகரன் மற்றும் கதிரின் கொட்டத்தை அடக்குவதற்கு ஆதிரை அருண் திருமணம் தான் சரியான பதிலாக இருக்கும்.

Also read: கொஞ்சநஞ்ச பேச்சா பேசினீங்க ஜீவா.. இப்படி மாமனாரிடம் மாட்டி தவிக்கும் பரிதாபம்

இன்னொரு பக்கம் சக்தி வந்தால் கதிரை தட்டி கேட்பார் என்று எதிர்பார்த்தால் அதுவும் கடைசியில் ஏமாற்றமாக முடிந்து விட்டது. கதிருக்கு கொடுக்கிற வசனங்கள் பாதியாவது சக்திக்கும் கொடுத்தால் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்திருக்கும். எல்லாத்துக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக கதிர் பேசியது ரொம்பவே காண்டாகிறது. அடுத்ததாக ஜான்சி ராணி குணசேகரன் வீட்டிற்கு வந்து குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டும் அதனால் ஆதரையும் வரவேண்டும் என்று கூப்பிடுகிறார்.

குணசேகரனும் இதற்கு ஒன்று சொல்லாமல் சம்மதம் தெரிவித்தது ஏதோ இதில் உள்குத்து வேலை இருப்பது போல் தெரிகிறது. அதாவது யாருக்கும் தெரியாமல் கோவிலில் அதிரை கரிகாலன் கல்யாணத்தை நடத்துவதற்கு முடிவு பண்ணி இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஆனாலும் ஆதிரை நான் கோவிலுக்கு போக வேண்டுமென்றால் என் கூட சக்தி ஜனனி வரவேண்டும் என்று சொல்கிறார். இதற்கு சப்போர்ட்டாக குணசேகரின் அம்மாவும் கண்டிப்பாக ஆதிரை கூட ஜனனி போக வேண்டும் என்று கூறிவிட்டார்.

Also read: மூர்த்தியின் அருமையை புரிந்து கொள்ளும் ஜீவா.. அண்ணன் அண்ணியை விட்டுக் கொடுக்காத கதிர்

இன்று வருகிற ப்ரோமோவை பார்க்கும் பொழுது சக்தி ஜனனி நந்தினி மற்றும் ஆதிரை இவர்கள் அனைவரும் சேர்ந்து ஜான்சி ராணியின் குலதெய்வம் கோயிலுக்கு போகிறார்கள். அதே நேரத்தில் குணசேகரனும் அங்கு போய் ஏதாவது ஒரு கலவரம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவர்கள் போகும் அதே ஊரில் தான் அருண் கௌதம் இருக்கிறார்கள். அதனால் அங்கு என்ன வேணும்னாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

ஆக மொத்தத்தில் ஒரு தரமான சம்பவம் காத்திருக்கிறது. ஒரேடியாக அந்த கோவிலில் போய் ஆதிரைக்கு யாருடையாவது கல்யாணத்தை பண்ணி வைத்தால் ரொம்பவே நல்லா இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இந்த கதையை தான் கடந்த நான்கு மாதமாக வைத்து இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். சீக்கிரத்தில் இதே க்ளோஸ் பண்ணி அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் யாரு என்று கண்டுபிடித்து குணசேகரன் கனவு கோட்டை கட்டி இருக்கும் அந்த 40% சொத்தை அவரிடம் பிடுங்குவதற்கு வழி பார்த்தால் நன்றாக இருக்கும்.

Also read: குணசேகரனை விட டபுள் மடங்கு மிஞ்சிய கதிர்.. திருப்பி அடிக்கும் ஜனனி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்