ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ராம்சரணின் பிறந்தநாளில் வெளியான RC 15 டைட்டில்.. ஆட்டத்தை ஆரம்பித்த ஷங்கர்

ராம்சரணுக்கு தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று ராம்சரண் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆகையால் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஆர்சி 15 படத்தில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் தமிழில் இந்தியன் 2 படமும் உருவாகி வருகிறது. லைக்கா தயாரிக்கும் இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வருகிறார். ஷங்கர் மாதத்தில் 15 நாட்கள் இந்தியன் 2 படத்திற்கும், மீதமுள்ள 15 நாட்கள் ஆர்சி15 படத்திற்கும் ஒதுக்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.

Also Read : இந்தியன் 2 படத்தில் இப்படி ஒரு காட்சியா?. 100 பேர் கொண்ட குடும்பத்தை கொத்தோடு தூக்கிய ஷங்கர்

ராம்சரணின் ஆர்சி 15 படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். இவர் தமிழில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் ஆர்சி 15 படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

இந்நிலையில் ராம் சரணின் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக டைட்டில் வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று டைட்டில் வீடியோவை தில் ராஜு தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முழுக்க முழுக்க சதுரங்க விளையாட்டை கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

Also Read : வேள்பாரியில் சூர்யா இல்லை.. முரட்டுத்தனமான ஹீரோவுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் ஷங்கர்

மேலும் ஆர்சி 15 படத்தின் டைட்டில் “கேம் சேஞ்சர்” என வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் படத்தில் ராம் சரண் மூலம் பெரிய மாற்றம் உள்ளது போல் ஷங்கர் கதை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆர்சி 15 மூலம் ஷங்கரும் ஒரு சதுரங்க விளையாட்டை விளையாடி உள்ளார்.

மேலும் இன்று முழுக்க ஆர்சி 15 படத்தை பற்றிய நிறைய அப்டேட்டுகள் வெளியாக உள்ளது. அதுமட்டும்இன்றி இந்த படத்தில் ஊழலுக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் ராம்சரண் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது கேம் சேஞ்சர் டைட்டிலை பார்த்து ராம்சரண் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read : பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2.. கண்டம் விட்டு கண்டம் போகும் கமல், ஷங்கர்

- Advertisement -

Trending News