பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2.. கண்டம் விட்டு கண்டம் போகும் கமல், ஷங்கர்

கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த கமல் இந்த வருடமும் அதை விட டபுள் மடங்கு வெற்றியை பார்க்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் நடித்து வரும் படம் தான் இந்தியன் 2. இவருடன் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வரும் ஷங்கர் மற்றும் படக் குழுவினர் இதற்காக முழு முயற்சியுடன் போராடி வருகிறார்கள்.

இப்பொழுது இந்தப் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது. மீதமுள்ள மற்ற காட்சிகளும் வேக வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன. பின்பு இந்த படத்திற்கான சண்டை காட்சிகள் சென்னையில் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இதற்கு அடுத்து திருப்பதியில் வைத்தும் சில சீன்கள் எடுக்கப்பட்டு முடித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தின் அடுத்த காட்சிகளுக்கான படப்பிடிப்பை கண்டம் விட்டு கண்டம் தாண்டி எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

Also read:  கமலால் ஒரே படத்தால் காணாமல் போன தயாரிப்பாளர்.. மீண்டும் கை பிடித்து தூக்கி விடும் சூப்பர் ஸ்டார் மோகன்லால்

அதற்காக தற்போது படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்கிறார்கள். அங்கே சூட்டிங் ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு இருக்கிறார்கள். அதன்பின் தென் ஆப்ரிக்கா சென்று அங்கே பத்து நாட்களுக்குள் மிகப்பெரிய சண்டைக் காட்சிகளை எடுக்க இருக்கிறார்கள். இப்படி வெளியூர் காட்சிகள் எல்லாம் முடித்துவிட்டு கடைசியாக கிளைமாக்ஸ் காட்சியை சென்னையில் வைத்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக இந்த படத்தின் ஒரு காட்சியில் இதுவரை நாம் பார்க்காத பழைய சென்னையை உருவாக்கி இருக்கிறார்கள். அதுவும் மிகத் தத்ரூபமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இந்தப் படத்திற்காக இப்படி மெனக்கிடுவதை பார்த்தால் கண்டிப்பாக இந்த படம் தமிழ் சினிமாவுக்கு மிகப் பிரமாண்டமாகவும், பெரிய வெற்றி படமாகவும் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Also read: தயாரிப்பாளரை தலையில் துண்டு போட வைத்த சங்கர்.. பல கோடி செலவில் எடுக்கப்பட்ட 5 பாடல்கள்

அத்துடன் இந்த படத்திற்காக இவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும் அதிகமாக தான் இருந்திருக்கிறது. ஏற்கனவே அப்போதைய காலத்திலேயே இந்தியன் பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டு அதிக அளவில் லாபத்தை கொடுத்தது. அதைவிட இப்பொழுது பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருவதால் தமிழ் சினிமாவின் வரலாற்றை புரட்டிப் போடும் அளவிற்கு இப்படம் அமையப்போகிறது.

இதனை அடுத்து இன்னொரு புறம் இப்படத்தின் குழுவினர் மற்றும் வசந்த பாலன் தலைமையில் மற்றொரு குழு இவர்கள் அனைவரும் இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியன் தாத்தாவை பற்றி கேட்டு வருகிறார்கள். ஏனென்றால் அவர்களின் கருத்துக்கள் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஆக மொத்தத்தில் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டு இருக்கிறார்கள்.

Also read: விக்ரம் வசூலை மிஞ்சுவதற்கு போராடும் கமலஹாசனின் புகைப்படம்.. ஹாலிவுட் லெவலுக்கு தயாராகும் இந்தியன்-2

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்