Thalapathy Actress: கோலிவுட்டில் டாப் நடிகராக இருக்கும் விஜய்யுடன் இணைந்து நடித்த தளபதியின் நடிகை இப்போது தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அதிலும் இவர் நடித்திருக்கும் படத்தில் திகட்ட திகட்ட கதாநாயகனுக்கு லிப்லாக் கொடுத்து இளசுகளை திணறடித்துள்ளார்.
புஷ்பா படத்தின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா, அதன் தொடர்ச்சியாக தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது.
ஹிந்தியில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா தென்னிந்தியாவை சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் பெண்ணாகவே நடித்திருக்கிறார். இதில் ரன்வீர், ராஷ்மிகாவிற்கு இடையே ரொமான்ஸ் தூக்கலாக இருக்கிறது. அதிலும் காதல் பாடல் ஒன்றில் திகட்ட திகட்ட ராஷ்மிகா, ரன்பீர் கபூருக்கு லிப் லாக் கொடுக்கிறார்.
தமிழில் ‘நீ வாடி’ என்று ரீமேக் செய்யப்பட்ட இந்த ரொமான்ஸ் பாடல் முழுவதும் முத்த சத்தம் தான் கேட்கிறது. பொது இடங்களில் அனைவர் முன்னிலையில், விமானத்தில் என எங்கு பார்த்தாலும் முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர். இதை மட்டும் விஜய் தேவர்கொண்டா பார்த்தா துடிச்சு போயிருவாரு.
ஏனென்றால் இதுவரை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா உடன் மட்டும்தான் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறார். இப்போது பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு கட்ட வேண்டும் என்று அனிமல் படம் முழுக்க ரன்பீர் கபூருடன் லிப் லாக் கட்சியில் நடித்திருக்கிறார். இதற்கு அவர் வாங்கிய சம்பளம் 4 கோடி, இதற்கு முன்பு அவர் மற்ற படங்களுக்கு 2 கோடி தான் சம்பளம் வாங்கி இருக்கிறார்.
திடீரென்று தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தியதற்கு காரணம், இதில் ராஷ்மிகா கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்க ஒத்துக் கொண்டதுதான். ‘இது மட்டுமல்ல இன்னும் பணம் கொடுத்தா நெக்ஸ்ட் லெவல் கூட நடிப்பார், இவர் காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவார் போல’ என்று தளபதி ரசிகர்கள் ராஷ்மிகாவை வறுத்தெடுக்கின்றனர். மேலும் அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு 80 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்கள்.