இறந்த பிறகும் வாழ வைத்த டேனியல் பாலாஜியின் ஆத்மா.. கண் கலங்க வைத்த சம்பவம்

Actor Daniel Balaji: இன்று காலையிலேயே இப்படி ஒரு செய்தியை கேட்போம் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம். பல படங்களில் வில்லனாக மிரட்டிய டேனியல் பாலாஜி இன்று உயிர் நீத்துள்ளார்.

48 வயதே ஆன இவர் நேற்று மாரடைப்பின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

அவருடைய மறைவு செய்தி தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்திருக்கிறது. அவருடைய இழப்பை தாங்க முடியாத வேதனையில் அனைத்து நட்சத்திரங்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கண்தானம் செய்த டேனியல் பாலாஜி

இந்த சூழலில் இவர் தன் கண்களை தானம் செய்திருப்பதும் வியக்க வைத்துள்ளது. உயிருடன் இருக்கும் போது பல நல்ல விஷயங்களை செய்து வந்த இவர் இறந்த பிறகும் முகம் தெரியாத ஒருவரை வாழ வைத்திருக்கிறார்.

அதன்படி இவருடைய இறப்பை உறுதி செய்த மருத்துவர்கள் அதன் பிறகு அறுவை சிகிச்சை மூலம் கண்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து அவருடைய உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அவர்கள் கண் இருந்த பகுதியை துணியால் கட்டி கண்ணாடியும் அணிவித்துள்ளனர். இப்படி அவருடைய உடல் கண்ணாடி பெட்டிக்குள் இருப்பதை பார்த்த பலருக்கும் மனது கனத்து தான் போகிறது.

தற்போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த அதர்வா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் குவிந்து வருகின்றனர். இறந்தாலும் தன் கண்கள் மூலம் உலகத்தை பார்க்க வேண்டும் என கண் தானம் செய்திருக்கும் டேனியல் பாலாஜியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

 

Next Story

- Advertisement -