ஆண்டவரே இதுக்கு ஒரு எண்டு இல்லையா.. எல்லை மீறும் போட்டியாளர்கள், முகம் சுளிக்க வைக்கும் பிக்பாஸ்

Biggboss 7: விஜய் டிவியில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது ரணகளத்திலும் ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசன் போட்டியாளர்கள் எல்லாம் இவர்களுக்கு கால் தூசி மாதிரி என்று நினைக்க வைக்கும் அளவுக்கு ஒவ்வொருவரும் வில்லத்தனத்தின் உச்சம் தொட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அந்த டைட்டிலும் பிக்பாஸ் கொடுக்க போகும் பணமும் தான்.

அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று மாயா, பூர்ணிமா, பிரதீப் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தந்திரத்துடன் விளையாடி வருகின்றனர். அதில் பழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் லவ் கன்டென்ட் கொடுக்க ஒவ்வொருவரும் பேய் போல் அலைகின்றனர். ஆரம்பத்தில் மணி ரவீனா ஜோடியின் காதல்தான் பிக் பாஸுக்கு பலமாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் என்று நினைக்கும் படியாக ஒவ்வொருவரும் அதை டேக் ஓவர் செய்து வருவது நிச்சயமாக சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை.

அதற்கு மாறாக என்ன இந்த அளவுக்கு இறங்கிட்டாங்க என முகம் சுளிக்க தான் வைத்திருக்கிறிருக்கிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி விக்ரம் பின்னால் பூர்ணிமா காதலா இல்ல வேறயா என தெரியாத அளவுக்கு ஒரு உணர்வுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார். கிடைக்கும் சந்தர்ப்பத்தை எல்லாம் விடாமல் அவரை ஒட்டி உரசி கொண்டிருப்பது தான் அவருடைய முக்கிய வேலையாக இருக்கிறது.

Also read: ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் கருப்பு ஆடு.. கூட இருந்தே குழி பறிக்கலாமா! சூடு பிடிக்கும் பிக்பாஸ்

அப்படியே கேமராவை ஐஷு பக்கம் திருப்பினால் எப்போதும் நிக்சனுடன் அவர் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் இவருக்கு வெளியில் லவ்வர் ஒருவர் இருக்கிறார். அது தெரிந்தும் கூட நிக்சன் ஐஷுவை கண்ணே மூக்கே என கொஞ்சுவது, தடவுவது என கடுப்பேற்றி வருகிறார். அதைத்தொடர்ந்து இப்போது 5 புது வரவுகள் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரையும் கவிழ்க்க வேண்டும் என பிளான் போடும் போட்டியாளர்கள் இப்போது கையில் எடுத்திருக்கும் அஸ்திரம் தான் லவ் கன்டென்ட். அதில் பிரதீப் அக்ஷயாவை பிராவோ உடன் நெருங்கி பழகுமாறு அனுப்பி வைக்கிறார். அந்த பொண்ணும் காபி வேணும், டீ வேண்டும் என கேட்டு அவரிடம் ஒரு உறவை உருவாக்க முயற்சி செய்கிறார். மேலும் பிரதீப்பும் ஒரு பக்கம் எனக்கு மூணு லவ் ட்ராக் ஓடுது என வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டு திரிகிறார். இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் ஆளாளுக்கு ஒரு யுக்தியை கையில் எடுத்துக் கொண்டு அலைகின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஆண்டவரே இதுக்கு ஒரு எண்டே கிடையாதா என கதறத் தான் தோன்றுகிறது. ஆனாலும் பெரிய பெரிய பஞ்சாயத்துக்களை எல்லாம் சாமர்த்தியமாக தீர்த்து வைக்கும் கமல் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மேடைக்காக விளையாடுங்கள் காசுக்காக வேண்டாம் என்று அவர் ஒரு அறிவுரையை கூறியிருந்தார். அப்படியும் கேட்காத இந்த பிரகஸ்பதிகள் ஆண்களை கவுக்க மாயக்காரிகள் போல் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

Also read: சில்ர பயலே, செருப்பால அடிப்பேன் நாயே.. பிக் பாஸில் நிஜ முகத்தை காட்டியதால் ரெடியாகும் ரெட் கார்டு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்