வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சில்ர பயலே, செருப்பால அடிப்பேன் நாயே.. பிக் பாஸில் நிஜ முகத்தை காட்டியதால் ரெடியாகும் ரெட் கார்டு

Bigg Boss Tamil Season 7 | 31st October 2023 – Promo 2 : மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்ட நாளில் இருந்தே காரசாரமாக ஒளிபரப்பாகிறது. அதிலும் டைட்டிலை அடித்து விட வேண்டும் என ஒவ்வொருவரும் விதவிதமான ஸ்டேடர்ஜியை பின்பற்றுகின்றனர். பிரதீப் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என அனைவரும் நினைத்தனர். ஆனால் இவர் விஜய் வர்மாவை விட மோசமாக நடந்து கொள்கிறார்.

இவருக்கு ஸ்ட்ரைக் கார்ட் எல்லாம் வேண்டாம், ஸ்ட்ரைட்டா ரெட் கார்டே கொடுக்க வேண்டும். ‘அசைஞ்சா போச்சு’ என்ற டாஸ்க் இன்று பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டது. பெல் கொண்ட பெல்ட்டை போட்டியாளர்கள் தலையில் அணிந்து கொண்டு அந்த பெல் ஃப்ரீஸ் ஆக வைப்பது தான் டாஸ்க். அப்போது பிரதீப் கூல் சுரேஷை பார்த்து ‘அவர் மணிய ஆட்டிக்கிட்டு மட்டும் இருக்க சொல்லுங்க’ என்று இரட்டை அர்த்தத்துடன் அசிங்கமாக பேசினார்.

இவ்வளவு நாள் கூலாக பிக் பாஸ் வீட்டில் இருந்த சுரேஷ் பிரதீப்பின் அவமான பேச்சால் பெட்டியை கட்டிக்கொண்டு கிளம்ப பார்த்தார். உடனே வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் அவரை அமைதிப்படுத்தி வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அதன் பின்பு பிரதீப் சொன்னது தப்புதான் என்று கூல் சுரேஷிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள்.

ஆனால் அப்போதும் பிரதீப், ‘நான் இப்படி தான் மரியாதை இல்லாமல் பேசுவேன். இது என்னோட ஸ்டேட்டர்ஜி’ என்று ஓவராக திமிருடன் பேசுகிறார். மக்கள் கொடுக்கிற சப்போட்டால் பிரதீப் நாளுக்கு நாள் ஓவராக ஆடுகிறார். மரியாதை இல்லாமல் பேசாதே’ என கூல் சுரேஷ் சொன்னதும், ‘சில்லறை பயலே! செருப்பு பிஞ்சிடும் நாயே’ என்று பிரதீப் எல்லை மீறிய வார்த்தைகளால் திட்டுகிறார்.

பிரதீப் பண்ணுவது கொஞ்சம் கூட சரியல்ல என ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அவருக்கு எதிராக திரும்புகின்றனர். பிரதீப்பின் உண்மையான முகத்திரை இப்போது கிழிந்து தொங்குகிறது. அதேசமயம் கூல் சுரேஷ் இப்போதுதான் தன்னுடைய ஆட்டத்தை ஆட துவங்கியிருக்கிறார்.

இனிமேல் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கப் போகிறது. மேலும் பிரதீப் பேசுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் அவர் யாருக்குமே மரியாதை கொடுக்காமல் படு கேவலமாக வார்த்தைகளை விடுகிறார். நிச்சயம் இந்த வாரம் பிரதீப்பிற்கு ஆண்டவர் ரெட் கார்ட் கொடுப்பது உறுதி.

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ!

- Advertisement -

Trending News