படபிடிப்பில் தொடர்ந்து நடந்த அவமானம்.. நானே முதலாளி என பழிக்கு பழி தீர்த்த சூர்யா

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சூர்யா பற்றிய விஷயம் தான் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இவர் இப்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து வாடிவாசல் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடிக்க இருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பல நல்ல திரைப்படங்களையும் இவர் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தயாரித்து நடித்து வந்த வணங்கான் திரைப்படத்திலிருந்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் விலகி இருக்கிறார். இந்த அறிவிப்பை படத்தின் இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் தனித்தனியாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்காத பலரும் இந்த விஷயத்தின் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை தற்போது கிளற ஆரம்பித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தால் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், சூர்யா படப்பிடிப்பு தளத்திலிருந்து கோவமாக வெளியேறியதாகவும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அதில் உண்மை இல்லை, படப்பிடிப்பு நடந்து கொண்டு தான் இருக்கின்றது என பாலா கூறி வந்த நிலையில் இப்படி ஒரு விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: பாலாவை போல காய் நகர்த்தும் மற்றொரு இயக்குனர்.. நாசுக்காக வெளியில் தெரியாமல் செய்யும் வேலை

உண்மையில் இந்த விவகாரத்திற்கு பின்னால் பாலாவின் அடக்குமுறையும், பழிவாங்கும் குணமும் தான் நிறைந்து இருக்கிறது. அதாவது பாலாவின் குணம் என்ன என்று திரை உலகில் அனைவருக்குமே தெரியும். சூட்டிங் ஸ்பாட்டில் அவர் எவ்வளவு மோசமாக நடந்து கொள்வார் என்று பலரும் கூறியிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இவருடைய படத்தில் நடித்தால் அவர்களுடைய கதி அவ்வளவுதான்.

அந்த அளவுக்கு இவர் மிகவும் சைக்கோ தனமாக நடந்து கொள்வாராம். அதே குணத்தை தான் இவர் சூர்யாவிடமும் காட்டி இருக்கிறார். நந்தா படத்தில் நடித்த போது பிரபலம் இல்லாத சூர்யா இப்போது சமூகத்தில் மதிக்கத்தக்க ஒரு இடத்தில் இருக்கிறார். அப்படி பார்க்கும்போது அவருக்கான ஒரு சிறு மரியாதையை பாலா கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யாமல் படபிடிப்பு தளத்தில் அனைவரின் முன்னிலையிலும் சூர்யாவை வாயா, போயா, போடா என்று ஏக வசனத்தில் பேசி இருக்கிறார்.

Also read: அப்பா, மகனே பார்க்க கூடாத படுக்கையறை காட்சி.. டபுள் மீனிங் இயக்குனரால் நிலைகுலைந்த விக்ரம்

அது மட்டுமல்லாமல் படத்தின் கதை என்ன என்று அவர் சூர்யாவிடம் கூறவில்லையாம். இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்து பணத்தை போட்டு நடித்து வந்த சூர்யா சில நாட்களுக்குப் பின் ஸ்கிரிப்ட் பற்றி கேட்டிருக்கிறார். இதனால் கடுப்பான பாலா சூர்யாவை மொட்டை வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கடற்கரை மணலில் ஓட விட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் வேண்டும் என்றே ஒரே காட்சியை இவர் பல நாட்களாக எடுத்திருக்கிறார்.

இதனால் ஒரு தயாரிப்பாளரான சூர்யாவுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர் அமைதியாகவே இருந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக பெரிதான இந்த விவகாரம் சிவகுமாரின் காதுக்கும் சென்று இருக்கிறது. ஒரு கட்டத்தில் பாலாவின் கொடுமை அதிகமாகவே சூர்யா படபிடிப்பு தளத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியிருக்கிறார். அதன் பிறகு ஒவ்வொரு பிரச்சனையாக ஆரம்பித்து தற்போது அவர் இந்த படத்திலிருந்து விட்டால் போதும் சாமி என வெளியேறி இருக்கிறார்.

Also read: அஜித்துக்கு இயக்குனர் கொடுத்த டார்ச்சர்.. எல்லாருடைய சாபத்தினால் பறிபோகும் பட வாய்ப்பு

- Advertisement -spot_img

Trending News