டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை ஆக்கிரமித்த சீரியல்கள்.. எதிர்நீச்சலை டம்மியாக்கிய டாம் அண்ட் ஜெர்ரி

ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்தபடியே குடும்ப இல்லத்தரசிகள் அவர்களுடைய ஆதரவை கொடுப்பது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் தான். இந்த சீரியல்களால் தான் அவர்களுடைய நேரத்தை கழித்து வருகிறார்கள் என்பதற்கு ஏற்ப தொடர்ந்து பல சேனல்கள் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் எந்த சீரியல் ரசிகர்களின் மனதை கவர்ந்து முதல் ஆறு இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

தற்போது விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங் இந்த ஒரு நாடகத்தின் மூலம் தான் அதிகரித்திருக்கிறது என்பதற்கு ஏற்ப இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை 8.84 ரேட்டிங்கை பிடித்து ஆறாவது இடத்திற்கு போயிருக்கிறது. தற்போது இந்த நாடகம் சுவாரசியமாகவும், இதில் நடிப்பவர்களின் நடிப்பு எதார்த்தமாகவும் இருக்கிறது என்று மக்கள் இதை பார்த்து வருகிறார்கள்.

இதற்கு அடுத்து ரக்கடான கேரக்டரையும், காதலையும் மாற்றி மாற்றி அந்நியன் போல நடிப்பில் பின்னி பெடல் எடுக்கும் விக்ரமுக்கு வரும் ஆதரவால் தற்போது இனியா நாடகம் 9.12 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதுவும் தற்போது விக்ரம் அல்டிமேட் ஆக நடிப்பை கொடுத்து பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்து விறுவிறுப்பாக கதை போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக எப்போதுமே பாசத்திற்கு ஒரு தனி மதிப்பு உண்டு என்பதை சொல்லும் பொருட்டாக அண்ணன் தங்கை பாசத்தை வைத்து பல வருடமாக உருட்டி வரும் வானத்தைப்போல சீரியல் 10.07 ரேட்டிங் பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் இந்த நாடகத்திற்கு இன்னும் வலு சேர்க்கும் வகையில் சஞ்சீவ் போலீஸ் கேரக்டரில் மாஸ் என்டரி கொடுத்து தூள் கிளப்பி வருகிறார்.

இதற்கு அடுத்து விடாது கருப்பு மாதிரி கலெக்டர் ஆனாலும் பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வரும் சுந்தரி சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்தை பெற்று 10.12 ரேட்டிங்கை பிடித்திருக்கிறது. அதுவும் புதுப்புது பிரச்சினைகள் மற்றும் சுந்தரிக்கு ஏற்ற ஒரு கேரக்டரையும் கொண்டுவந்து நாடகம் தற்போது வேறு விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக ஒரு பெண் தலையில் எத்தனை சுமைகள் வந்தாலும் தன்னுடைய குடும்பத்திற்காக எதையும் தாங்கிக் கொள்ளும் இரும்பு பெண்மணி ஆக இருக்கும் கயல் நாடகம் இரண்டாவது இடத்தை பெற்று 10.72 டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் தம்பி தங்கை இருவரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விதத்தில் கயல் அவர்களுக்கு ஆதரவாக இருந்து எப்படி எல்லாத்தையும் சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பாக நகர்கிறது.

இதற்கு அடுத்து இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து இருப்பது எதிர்நீச்சல் சீரியல் தான். இதில் குணசேகரன் இல்லாமல் தட்டு தடுமாறி போனாலும் ரசிகர்களின் ஆதரவால் தற்போது வரை சிம்ம சொப்பனமாக இருக்கிறது. அந்த வகையில் 11.54 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இருந்தாலும் இப்போ இருக்கிற நிலவரத்தின்படி குணசேகரன் இல்லாமல் ரசிகர்கள் பார்க்க விரும்புவதில்லை.

அதனால் இந்த நாடகத்தை பார்ப்பதற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை ரொம்பவே நன்றாக இருக்கிறது என்று பலரும் அவர்களுடைய கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் முத்து மற்றும் மீனா டாம் அண்ட் ஜெரியாக இருந்து அவர்களுடைய ரொமான்ஸ்களை கொடுப்பதினால் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்