உன் போக்கு சரி இல்ல, நீ நடிச்சது போதும்.. திருமணமான பிறகு சுயரூபத்தைக் காட்டிய கணவன்

திரையுலகில் இருக்கும் நடிகைகள் ஒரு சிலருக்கு மட்டுமே திருமணத்திற்கு பிறகும் தங்களது நடிப்பை தொடர அனுமதி அளிக்கப்படுகிறது. அப்படி கல்யாணமான பிறகு காதலித்த கணவருக்காக டாப் சீரியலில் கதாநாயகியாக நடித்த நடிகை ஒருவர் அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பது சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியை வைத்துள்ளது.

ஜீ தமிழில் சமீபத்தில் துவங்கப்பட்ட சீதாராமன் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி, அந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாக இருக்கிறது. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது, இந்த நிலையில் அவருடைய கணவரால் தான் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்ற தகவலும் காட்டுத் தீ போல் இணையத்தில் பரவுகிறது.

Also Read: 2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலின் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பிரியங்கா நல்கரி கிட்டத்தட்ட 4 வருடங்களாக வெற்றிகரமாக ஓடி, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது. இந்த சீரியலுக்கு பிறகு நடிகை பிரியங்கா ஜீ தமிழில் துவங்கப்பட்ட சீதாராமன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் துவங்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் இவர் பெரிய கண்ணாடி போட்டுக்கொண்டு மிகவும் எதார்த்தமான கிராமத்து பெண்ணாக திருச்செந்தூர் பாஷை பேசி ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாகவே மாறினார். இதில் மார்டன் மாமியாரை ரவுண்டு கட்டும் மருமகளாக பிரியங்கா சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: 5 வருஷமா சாவடிச்சுட்டாங்க, செம போர்.. டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருந்த சீரியலை கழுவி கழுவி ஊற்றிய கதாநாயகன்

இந்நிலையில் பிரியங்காவிற்கும் தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இப்போது ராகுல் மலேசியாவில் செட்டில் ஆகி இருக்கிறார். ஏற்கனவே ராகுல் மற்றும் பிரியங்கா இருவருக்கும் என்கேஜ்மென்ட் நடந்து முடிந்ததும், இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பின் பல வருடம் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

மிக எளிமையாகவே இவர்களது திருமணம் நடந்திருக்கிறது. தற்போது பிரியங்கா திருமணத்திற்கு பிறகு அவருடைய கணவரோடு மலேசியா சென்றுவிட்டார். இப்போது சீதாராமன் சீரியலின் ஷூட்டிங்கிற்காகவே மலேசியாவில் இருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார். இப்படி செய்வது அவருடைய கணவருக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

Also Read: ரஜினியால் படாதபாடு படும் ரோஜா.. பொது இடத்தில் முத்தமிட்டதால் கிளம்பிய அடுத்த சர்ச்சை

அதனால் சீரியலில் இருந்து விலகி விடு, உன் போக்கு சரியில்லை, இவ்வளவு நாள் நீ நடித்ததெல்லாம் போதும். நான் இங்கே நல்லா சம்பாதிக்கிறேன் என்று சீரியலில் இருந்து விலகும் படி ஸ்டிட்டாக சொல்லிவிட்டாராம். ஆனால் திருமணத்திற்கு முன்பு ராகுல் இப்படி எல்லாம் கண்டிஷன் போடாததால் பிரியங்கா இது குறித்து அதிர்ச்சியில் இருக்கிறார். இப்போதுதான் ராகுலின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. இருப்பினும் கணவர் சொல் பேச்சை கேட்க வேண்டும் என பிரியங்காவும் விருப்பம் இல்லாமல் தான் சீரியலில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்