சாம்பார் என ஜெமினிக்கு பெயர் வந்ததன் ரகசியம்.. பல வருட ரகசியத்திற்கு கிடைத்த பதில்

அந்தக் காலத்தில் மூவேந்தராக தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன். இவர்கள் மூவரும் தான் அந்த கால சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்தனர். அதில் ஜெமினிகணேசன் காதல் மன்னனாக தமிழ் சினிமாவை கலக்கி வந்தார்.

இன்று வரை காதல் மன்னன் என்ற பெயருக்கு சொந்தக்காரராக இவர் இருந்து வருகிறார். இவர் வாழ்க்கையில் ஏகப்பட்ட பெண்கள், ஏகப்பட்ட மனைவிகள் என்று பலர் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் வயதான நிலையில் கூட இவர் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என அவரே பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அந்த வகையில் காதல் மன்னன் என்ற பட்டம் இவருக்கு ரொம்பவும் பொருத்தமாக இருக்கிறது. அந்த காலத்தில் இவருக்கு சாம்பார் என்ற மற்றொரு பெயர் கூட உண்டு.

இவருடைய பெயரை குறிப்பிடாமல் ரசிகர்களும், மக்களும் சாம்பார் என பரவலாக கூப்பிட்டு வந்தனர். இதற்கு காரணம் அப்பொழுது அவர் பெயரைக் கெடுப்பதற்காக சிலர் அவரை அந்த மாதிரி அழைத்து வந்தனர் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் அவரை சாம்பார் என்று அழைப்பதற்கான காரணமே வேறு.

அதாவது ஜெமினிக்கு காதல் படங்கள் தான் நிறைய வெற்றிகளை கொடுத்திருக்கிறது. அதுதான் அவருக்கு பொருத்தமாகவும் இருந்திருக்கிறது. ஆனால் அவர் அதை விட்டுவிட்டு ஆக்சன் காட்சிகள் கொண்ட சண்டை படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் தான் மக்கள் அவருக்கு வெற்றியைத் தரும் காதல் படங்களில் நடிக்காமல் சாம்பார் போல தேவையில்லாமல் சண்டை படங்களில் நடித்து பெயரை கெடுத்துக் கொள்கிறார் என்று கூறி வந்தனர். அதன் பிறகு ரசிகர்களும் அவரை சாம்பார் என்று அழைப்பதே வாடிக்கையாக மாறிப்போனது.

Next Story

- Advertisement -