வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வந்த நான்காவது நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த காதல் ஜோடி.. சூடுபிடிக்கும் காதல் டிராக்!

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன்5ல், நான்காவது நாளிலேயே போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த கஷ்டமான தருணங்களை பகிர்ந்து ரசிகர்களை கண்ணீர் வடிக்க வைத்துள்ளனர். இது ஒருபுறமிருக்க பிக் பாஸ் சீசன்5 வீட்டின் ப்ளே பாயாக தொகுப்பாளர் மற்றும் யூடியூப்பருமான அபிஷேக் ராஜா வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஏனென்றால் எந்தப் பெண் போட்டியாளராக இருந்தாலும் அவர்களது மடியில் பட்டென்று படுத்து விடுகிறார். அதே போன்றுதான் நேற்றைய நிகழ்ச்சியில் சீரியல் நடிகையின் பவானி ரெட்டியின் மடியில் அபிஷேக் ராஜா படுத்துக்கொண்டு, பவானி ரெட்டி நடித்த சீரியல்களை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் அபிஷேக் ராஜா மற்றும் பவானி ரெட்டி இருவரையும் வைத்து கலாய்த்தனர். உடனே பவானி ரெட்டி, ‘அபிஷேக் ராஜா என்னுடைய தம்பி’ என்று பிளேட்டை மாற்றிப் போட்டு விட்டார்.

மேலும் அபிஷேக் ராஜா, பவானி ரெட்டியை ரொம்ப இனிமையானவர் அவரிடம் தன்னுடைய பிரச்சனையை சொல்ல மனசு ஏங்கும் என்றும் பவானி ரெட்டிக்கு 33 வயது ஆகிவிட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் பசங்க சைட் அடிக்க வேண்டாம் என்றும் கேமரா முன்னாடி சொன்னார்.

அதற்கு பதிலளித்த பவானி ரெட்டி, அது ஒன்றும் பரவாயில்லை காதலிக்கிறேன் என்று சின்ன பசங்கள் சொன்னால், நான் சிங்கிள் என்று சொல்லி விடுவேன் என பவானி ரெட்டியும் அபிஷேக் ராஜாவும் உரையாடிக் கொண்டனர்.

எனவே தற்சமயம் பிக் பாஸ் சீசன் 5ல், அபிஷேக் ராஜா மற்றும் பவானி பவானி ரெட்டி ஜோடி தான் பிக்பாஸ் வீட்டில் மலர்ந்த முதல் காதல் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

Trending News