வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய் டிவியின் கண்ட்ரோலில் எதுவுமே இல்ல.. பிக்பாஸ் மாயா விஷயத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்

BB7 Tamil:பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மாயா காப்பாற்றப்படும் போதெல்லாம் பார்வையாளர்கள் விஜய் டிவியை கழுவி ஊற்றி வருகிறார்கள். மாயா என்ன செய்தாலும் விஜய் டிவி அவரை காப்பாற்றி வருகிறது என பிக் பாஸ் ஆடியன்ஸ்கள் புலம்பி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கெல்லாம் நாங்க காரணமே இல்ல, என்ன நடக்குதுன்னு எங்களுக்கே புரியல என விஜய் டிவி குழம்பி வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் யார் இருக்க வேண்டும், யார் வெளியேற வேண்டும் என்பதை முடிவு செய்வதே மாயா தான். ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளரை குறி வைத்து, அவர்களை திசை திருப்பி மக்கள் முன்னிலையில் தவறாக சித்தரித்து வெளியேற்றி வருகிறார். இதில் சிக்கியவர்கள் தான் பிரதீப், ஐஷு போன்றவர்கள். சரவண விக்ரம் வெளியேறிய நிலையில் மாயா மீண்டும் தன்னுடைய வேலையை ஆரம்பித்திருக்கிறார்.

பெரும்பாலும் கடந்த சில வாரங்களாக மாயா நாமினேஷனில் சிக்கிக் கொள்வது இல்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் வீட்டில் இருப்பவர்களை அந்த அளவுக்கு மூளை சலவை செய்வதுதான். அப்படியே அதைத் தாண்டி மாயாவை நாமினீர் செய்தாலும் அவர் எலிமினேட் ஆவது இல்லை. இதற்கு முக்கிய காரணமாக கமலஹாசனும் சொல்லப்பட்டார்.

Also Read:மாயாவை எலிமினேஷன் பண்ணவே முடியாது.. பிக் பாசில் நடக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி

ஆனால் உண்மையில் கமலஹாசன் கூட இதற்கு காரணம் இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்கள் மீது கமல் காட்டிய ஆர்வம் இந்த சீசனில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரம் லைவை பார்ப்பதையே நிறுத்திவிட்டாராம். அப்படி இருக்கும் போது மாயா எப்படி இவ்வளவு நாட்கள் உள்ளே இருக்கிறார் என எல்லோருக்குமே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

மாயா எலிமினேஷனில் இருந்து சேவ் ஆவதற்கு முக்கியமான காரணம்

மாயா குறிப்பிட்ட சமூகத்தினரால் ஓட்டுக்கள் பெறப்பட்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து இருந்து வருகிறார். இதுவரை நடந்த அத்தனை எலிமினேஷனும் ஓட்டுக்களின் அடிப்படையில் மட்டும் தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அவர் நிறைய இடங்களில் தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதை நாசுக்காக ரிஜிஸ்டர் செய்து தான் வந்தார்.

இந்த வாரம் மக்கள் நினைத்தால் கண்டிப்பாக மாயாவை வெளியேற்றி விடலாம். ஆனால் மாயாவின் மூளைச்சலவையால் ஒரு சில போட்டியாளர்கள் தங்களுடைய பாதையை மாற்றிக் கொள்வதால் மக்கள் திடீரென அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று தங்களுடைய மனநிலையை மாற்றிக் கொள்கிறார்கள். இதுதான் மாயாவின் கேம் பிளான்.

Also Read:எனக்கு இருக்கிற ஒரே எதிரி பிக்பாஸ் தான்.. அடி மடியிலேயே கை வைத்த தவளை

- Advertisement -

Trending News