மாயாவை எலிமினேஷன் பண்ணவே முடியாது.. பிக் பாசில் நடக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி

BB7 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது 11 வாரங்களை கடந்து இருக்கிறது. நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் இருந்தே மாயாவை வெளியேற்ற பிக் பாஸ் பார்வையாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். மக்களுக்கு பிடிக்காத ஒரு நபர், மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் இன்னமும் உள்ளே இருப்பது தான் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வாரத்திலேயே மாயா வெளியே போகி இருக்க வேண்டியது. ஆனால் பவா செல்லதுரை வெளியேறியதால், அந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று விஜய் டிவியை அறிவித்துவிட்டது. அதிலிருந்து இன்று வரை மாயாவை பார்வையாளர்களால் எலிமினேஷன் பண்ண முடியவில்லை. சில வாரங்களில் மாயா நாமினேஷனில் கூட வருவது கிடையாது.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவர் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த மாயா கடந்த சில வாரங்களாகவே ரொம்பவும் சைலன்ட் மோடில் இருந்தார். ஆனால் சரவண விக்ரம் வெளியேறிய அந்த நாளில் தன்னுடைய உண்மையான முகத்தை மீண்டும் காட்டினார். ஒருவேளை அவருடைய குடும்பத்திலிருந்து உள்ளே வந்தவர்கள் கொடுத்த முரட்டு தைரியத்தால் மீண்டும் தன்னுடைய வேலையை ஆரம்பித்து இருக்கிறார் போல.

Also Read:மாயா செய்த கேவலமான வேலை.. மொத்த விஷத்தையும் கக்கி பிக்பாஸிடம் வாங்கிய குட்டு

என்னதான் மாயா சைலன்ட் மோடில் இருந்தாலும் அவர் விளையாடுவது எலிமினேஷன் கேம். அதாவது அந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதையே மாயா தான் முடிவு செய்கிறார். ஆரம்ப கட்டத்தில் அதிக வரவேற்பை பெற்ற ஜோவிகா விஜயகுமார் இருக்கும் இடம் தெரியாமல் போனது மாயாவின் பிளான் தான். ஐஷு மற்றும் நிக்சனை கோர்த்துவிட்டதும் மாயா தான்.

அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் மாயா

மாயாவுக்கு முழுக்க முழுக்க விஜய் டிவியின் ஆதரவு இருப்பது நன்றாக தெரிகிறது. போட்டியாளர்கள் எலிமினேஷனில் வெளியேறும் டோர் வழியில் இருக்கும் நபர்களுடன் மாயா பேச முயற்சி செய்தாலும் பிக் பாஸ் அதை கண்டு கொள்வது இல்லை. பல நேரங்களில் மைக்கை கழட்டி வைத்துவிட்டு பேசுகிறார், நாமினேஷன் பற்றி பேசுகிறார். ஆனால் இதுவரை இந்த விஷயங்கள் பிக் பாஸ் விதிமீறல்களுக்கு உள்ளே வரவில்லை.

எனக்கு நாடு தான் முக்கியம், வீடு தான் முக்கியம் என அறைகூவல் போட்டுக்கொண்டு சும்மா இருக்கும் போட்டியாளர்களை நோண்டும் கமலஹாசன் மாயாவை கடிந்து பேசுவதே கிடையாது. உண்மையை சொல்லப்போனால் மாயா செய்த தவறை ஒவ்வொரு எபிசோடிலும் நியாயப்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து விஜய் டிவி மற்றும் கமல் சப்போர்ட் உடன் மாயா நூறு நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வார் என்பது நன்றாக தெரிகிறது.

Also Read:பிக்பாஸ் வீட்டில் சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம்.. மிக்சர் சாப்பிட்டுட்டு சும்மா இருந்ததுக்கே இத்தனை லட்சமா!

Next Story

- Advertisement -