தயாரிப்பிலும் கமலை அப்படியே பாலோ செய்யும் லோகேஷ்.. அடுத்த உலக நாயகன் இவர்தான் போல

Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே பெரிய இடத்தை பிடித்திருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். கைதி என்ற ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த முன்னணி ஹீரோக்களையும் தன் பக்கம் திரும்ப வைத்துவிட்டார். ரஜினி மற்றும் கமலை வைத்து படம் பண்ண வேண்டும் என அவருக்கு முன்னால் வந்த இயக்குனர்கள் எல்லாம் ஏங்கி கொண்டிருந்த நிலையில் இவருக்கு அந்த வாய்ப்பு தேடாமல் கிடைத்தது.

தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனராக இருக்கும் லோகேஷ், தற்போது ரஜினியின் 171 படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜி ஸ்குவாட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தயாரிப்பாளராகவும் தன்னுடைய அடுத்த பரிமாணத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

Also Read:உங்க பழைய வேலைய எல்லாம் இங்க வச்சிக்காதிங்க.. லோகேஷுக்கு கண்டிஷன் போட்ட ரஜினி

உறியடி படத்தில் நடித்த விஜயகுமார் அடுத்து சண்டை கிளப் என்னும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தான் லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் தயாரிக்கிறார். படத்தின் முதல் போஸ்டரிலேயே விஜயகுமார் சட்டை இல்லாமல் தன்னுடைய சிக்ஸ் பேக்ஸ் உடம்புடன் வெறித்தனமாக போஸ் கொடுத்திருக்கிறார். இதை வைத்தே படம் பயங்கரமான ஆக்ஷன் கதையாக இருக்கும் என தெரிகிறது.

குருவுக்கு ஏற்ற சிஷ்யன் இவர்தான்

லோகேஷ் கனகராஜ் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது லாபம் பார்ப்பதற்காக இல்லை. திறமைகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் புதுமுக நடிகர்கள் மற்றும் அவருடன் அசோசியேட் இயக்குனர்களாக இருந்தவர்களை இயக்குனர்கள் ஆக்குவதற்கும் தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த சண்டை கிளப் படத்தின் விழாவில் இது பற்றி லோகேஷ் பேசியிருக்கிறார். அதாவது ஒரு படத்தில் சம்பாதித்ததை அப்படியே எடுத்து என்னுடைய சொந்த செலவுக்காக பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை. ஒரு படத்தில் சம்பாதித்ததை வைத்து புதிதாக வரும் திறமைசாலிகளை வளர்ப்பதற்காக இன்னொரு படத்தின் மீது முதலீடு செய்வது தான் என்னுடைய நோக்கம் என சொல்லி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு உலகநாயகன் கமலஹாசன் இதே வார்த்தையை சொல்லியிருந்தார். நான் சினிமாவில் சம்பாதித்ததை , சினிமாவுக்காக தான் முதலீடு செய்வேன் என்று. அதே வார்த்தையை இன்று அவருடைய சிஷ்யன் லோகேஷ் கனகராஜ் சொல்லி இருக்கிறார். இவருடைய பேச்சை கேட்டு சினிமா ரசிகர்கள் குருவுக்கு ஏற்ற சிஷ்யன் என்று சொல்லி வருகிறார்கள்.

Also Read:ரெண்டு இயக்குனர்களை சக்கையாக பிழிந்து எடுக்கும் கமல்.. மணிரத்தினத்துக்கு கொடுக்கும் டார்ச்சர்