ரெண்டு இயக்குனர்களை சக்கையாக பிழிந்து எடுக்கும் கமல்.. மணிரத்தினத்துக்கு கொடுக்கும் டார்ச்சர்

Kamalhassan: ருசி கண்ட பூனை சும்மா இருக்காது, என்பதற்கேற்ப கமல் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் ஏகபோக வரவேற்பை பெற்றுவிட்டார். அத்துடன் இதுவரை அவர் அடையாத வசூலை இந்த படத்தின் மூலம் அடைந்ததால், இவருடைய முழு நோக்கமே இதே மாதிரி வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதில் திரும்பி விட்டது.

அந்த வகையில் ஒவ்வொன்றையும் ரொம்பவே நுணுக்கமாக இருந்து செய்து வருகிறார். அதனால் தான் வெற்றியை கொடுக்கக்கூடிய இயக்குனர்களை தேர்ந்தெடுத்து கமிட் ஆகியிருக்கிறார். அப்படி தற்போது நடித்து வரும் படம்தான் பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்தினத்துடன் தக் லைஃப். இப்படத்தின் டைட்டில் வெளியிடும் பொழுது அதற்கு ஏற்ற ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றுவிட்டது.

இதனை தொடர்ந்து இப்படம் எப்படியாவது விக்ரம் படத்தின் வசூலை விட ஓவர் டேக் பண்ணி விட வேண்டும் என்று தொடர்ந்து மணிரத்தினத்துக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதுவும் எப்படி என்றால் மணிரத்தினம் அவருடைய பாணியில் சொல்லும்போது, இல்ல இல்ல இதைவிட இன்னும் சூப்பரா இப்படி பண்ணினா நல்லா இருக்கும் என்று இடையில் புகுந்து மணிரத்தினத்தை பிழிந்து எடுக்கிறார்.

Also read: கமல் தயாரிப்பில் நடிக்கப் போகும் 3 சீசன் 7 போட்டியாளர்கள்.. வனிதா கனவு வீண் போகல

இவரை மட்டும் இல்லாமல் எச் வினோத்துடன் கமல் அவருடைய 233 வது படத்தில் இணைந்திருக்கிறார். அதனால் இவரையும் சேர்த்து டார்ச்சர் பண்ணுகிறார். அதாவது வினோத் சொன்ன ஸ்கிரிப்டை மறுபடியும் மறுபடியும் கேட்டுக்கொண்டு வினோத்தை படாத பாடுபடுத்துகிறார். கமலின் முழு நோக்கமே விக்ரம் படத்தில் கிடைத்த வசூல் மற்றும் வரவேற்பு மாதிரி அடுத்த படங்களும் இருக்க வேண்டும் என்பதுதான்.

அதற்காக தற்போது இவரிடம் மாட்டிக் கொண்ட இந்த இரண்டு இயக்குனர்களை சக்கையாக பிழிந்து எடுக்கிறார். இதனால்தான் அடுத்து இவர் நடிக்கக்கூடிய இயக்குனர்களையும் படுத்தி எடுக்கும் அளவிற்கு ஆட்டம் ஆடுகிறார். இவரை பொறுத்தவரை தக் லைஃப் படமும், 233 வது படமும் செம ஹிட் ஆகிவிட வேண்டும் என்பது தான்.

Also read: சிவகார்த்திகேயனை நம்பி தெருவுக்கு வந்த கமல்.. 2000 கோடி போச்சு சோனமுத்தா