லியோ ஆடியோ லாஞ்சும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.. வெறுத்துப் போய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பட குழு

Leo-Vijay: பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களில் ப்ரமோஷன் மிக பயங்கரமாக நடைபெறும். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எதிர்பார்ப்பு எப்போதுமே கூடுதலாக இருக்கும். அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இவ்வாறு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து உள்ளதால் கண்டிப்பாக ஆடியோ லான்ச் படு ஜோராக இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.

Also Read : விஜய்யை வைத்து ஒரு கிராமத்தையே படிக்க வைத்த புண்ணியவான்.. ஆச்சரியப்பட்டு புல்லரித்து போன தளபதி

அதன்படி வெளிநாடுகளில் இந்நிகழ்ச்சியை நடத்த முயற்சி செய்த நிலையில் அது நடக்கவில்லை என்பதால், வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த ஏற்பாடு நடந்து வந்தது. ஆனால் இப்போது லியோ ஆடியோ லான்ச் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் அரசியல் கட்சிகளின் அழுத்தம் மற்றும் செல்வாக்கு காரணமாகத்தான் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்த விடாமல் செய்துள்ளதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். ஏனென்றால் விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் அரசியல் குறித்து விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Also Read : லியோவை சுற்றி பின்னப்படும் 5 சதிவலைகள், குழப்பத்தில் விஜய்.. 500 கோடிக்கே திணறும் லோகேஷ்

எனவே இந்த நிகழ்வில் விஜய் பேசும்போது கண்டிப்பாக அரசியலைப் பற்றி பேசினால் இப்போது உள்ள அரசியல் களத்தில் கண்டிப்பாக சர்ச்சை வெடிக்கும். இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்பதால் அதிகாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி விஜய்யின் படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக தொடர்ந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் தனது சமூக வலைதள பக்கத்தில் இசை வெளியீட்டு விழா ரத்துக்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

அதாவது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாஸ் நிரம்பி வழிவதால் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மேற்கொள்வதில் கடினம் இருக்கும் என்பதால் இந்நிகழ்ச்சியை ரத்து செய்வதாக பதிவிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இதில் எந்த அரசியல் காரணங்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் இதன் மூலம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருந்தாலும் விரைவில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக படத்தின் டிரைலர் மற்றும் அப்டேட் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

leo-audio-launch-cancelled
leo-audio-launch-cancelled

Also Read : அவரு அமைதியா, நிதானமா இருந்த GAP-ல விஜய் உருவாக்கிட்டாங்க! தல வந்தா வாலு தன்னால அடங்கும் – பேரரசு