49 இந்தியர்களின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. குவைத் தீ விபத்துக்கு பின்னால் இருக்கும் பெரிய சதி

Kuwait fire accident: குவைத் நாட்டில் நடந்த தீ விபத்து ஒன்று 49 இந்தியர்களின் உயிரை பலி வாங்கி இருக்கிறது. இதில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 11 பேர் அண்டை மாநிலமான கேரளா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து கொண்டிருந்த இந்தியர்களுக்கு இப்படி ஒரு மரணம் நேர்ந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கேரளா நாட்டைச் சேர்ந்த ஜமீர் என்பவர் இந்த தீ விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பே குவைத் நாட்டிற்கு சென்று டிரைவராக வேலை செய்து கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய இவருக்கு திருமணம் வேறு நடந்திருக்கிறது. எட்டு மாதத்திற்கு முன்பு இந்தியா வந்து விட்டு மீண்டும் குவைத்திற்கு சென்று இருக்கிறார்.

குவைத் தீ விபத்து பற்றி தமிழர்கள் தெரிந்து கொள்ள அணுக வேண்டிய தொலைபேசி எண்கள்

+91 1800 309 3793
+91 80 6900 9900
+91 80 6900 9901

இவர் இறந்தது இதுவரை இவருடைய மனைவி மற்றும் அம்மாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. இப்படி ஒரு கொடுமை எல்லாம் யார் வாழ்க்கையிலும் நடந்து விடக்கூடாது என வேண்டிக் கொள்ளத்தான் தோன்றுகிறது. ஆறு அடுக்குமாடி கட்டிடங்களை கொண்ட அப்பார்ட்மெண்டில் வெளிநாட்டிலிருந்து வந்து குவைத் நாட்டில் வேலை செய்பவர்கள் தான் அதிகமாக தங்கி இருந்திருக்கிறார்கள்.

இதில் ஒரு தனியார் கம்பெனியின் கட்டுமான பணியாளர்கள் தான் அதிகம். நேற்று அதிகாலை இந்த அப்பார்ட்மெண்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த நேரம் என்பதால் நெருப்பை அவ்வளவு சீக்கிரம் அணைக்க முடியவில்லை.

குவைத் தீ விபத்துக்கு பின்னால் இருக்கும் பெரிய சதி

பாதிப்பேர் புகையை அதிகமாக சுவாசித்து மூச்சு விட முடியாமல் இறந்திருக்கிறார்கள். இன்னும் பாதிப்பேர் வெளியேற வழி தெரியாமல் பயத்தில் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்து இருக்கிறார்கள். குவைத் நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியர்களின் வீட்டிலும் நேற்று காலையிலிருந்து சோகம் தாண்டவம் ஆடுகிறது.

எந்த நேரம் நமக்கு போன் வருமோ, ஏதாவது கெட்ட செய்தி சொல்லி விடுவார்களோ என்று அடிவயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இந்த அப்பார்ட்மெண்ட் தீ விபத்தில் அதிகப்படியான உயிரிழப்புத்து காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

அப்பார்ட்மெண்டின் முதலாளி அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு அதிகப்படியான நபர்களை இந்த கட்டிடத்தில் தங்க வைத்தது தான் இதற்கெல்லாம் காரணம். திடீரென தீ பிடித்ததும் அப்பார்ட்மெண்டில் இருந்த அத்தனை பேராலும் உடனே வெளியே வர முடியவில்லை.

அதற்கான வசதியும் அந்த கட்டிடத்தில் இல்லை. இதனால்தான் இவ்வளவு உயிர் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வருபவர்கள் மூலம் லாபம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் இந்த முதலாளி.

ஒரே அறையில் பல பேரை தங்க வைப்பது, அளவுக்கு மீறிய ஆட்களுக்கு கட்டிடத்தை வாடகைக்கு கொடுத்தது என அவர் காசுக்காக பண்ணிய விஷயம் இன்று பல உயிர்களை காவு வாங்கி விட்டது

Next Story

- Advertisement -