ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நெத்தி பொட்டில் அடித்த மாதிரி ஜனனி கேட்ட கேள்வி.. திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் குணசேகரன்

Ethirneechal: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தர்ஷினியின் வழக்கில் எங்கிருந்தோ வந்த வீடியோ வாக்கு மூலம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ஈஸ்வரி மீண்டும் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்.

ஆனால் ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோர் ஜாமினில் வெளிவந்த நிலையில் வழக்கு வேறு பக்கம் திசை திரும்பி இருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தம் ஜனனியிடம் முதல்வரின் கவனத்திற்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்ல ஐடியா கொடுத்திருந்தார்.

அதை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில் ஜனனி குணசேகரனை பார்த்து நெத்தியடி கேள்வி ஒன்றை கேட்கிறார். இதனால் அவர் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருக்கிறார். அதாவது சக்தி இனிமே போலீசை நம்பி ஒன்னும் ஆகாது என சொல்கிறார்.

Also read: கீ கொடுத்த பொம்மை போல் தர்ஷினி தந்த வாக்குமூலம்.. பின்னால் இருக்கும் மர்மம், விறுவிறுப்பாகும் எதிர்நீச்சல்

உடனே ஜனனி இதைவிட பவர்ஃபுல்லான இடத்துக்கு போகணும் என சிஎம் ஐடியாவை மனதில் வைத்து பேசுகிறார். மறுபக்கம் குணசேகரன், வீட்டில் இருப்பவர்களிடம் என் அப்பா தான் எனக்கு எல்லாமே அப்படின்னு என் மக சொல்லுவா என தைரியத்தோடு கூறுகிறார்.

அதற்கு ஜனனி அப்ப நீங்க தான் தர்ஷினியை கடத்தி வச்சிருக்கீங்களா? என சரியான பாயிண்ட்டை பிடிக்கிறார். இப்படியாக வெளிவந்துள்ள ப்ரோமோ சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இனிமேல் தர்ஷினியின் வழக்கு அதிரடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் விஜயா.. சைடு கேப்பில் ரொமான்ஸில் புகுந்த முத்துவின் அப்பா

- Advertisement -

Trending News