புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ரஜினியை ஏமாற்றிய தயாரிப்பாளர்.. லட்சத்தில் சம்பளம் வாங்கிய முதல் படம்

Actor Rajini: திரையுலகில் நடிகர்களை பொறுத்தவரை ரொம்பவே எளிமையான ஒரு நடிகர் என்று சொன்னதும் நினைவுக்கு வருவது நம்மளுடைய சூப்பர் ஸ்டார் தான். தற்போது வரை எட்டாத உயரத்தில் இருந்தும் கூட இவருடைய எளிமை தான் இன்னும் இவரை உச்சத்தில் வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட இவருடைய சம்பளம் ஆரம்ப காலத்தில் கம்மியாகத்தான் இருந்திருக்கிறது.

அதாவது எஸ்.பி முத்துராமன்  இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த பிரியா படத்தில் இவருடைய சம்பளம் கிட்டத்தட்ட 20,000 ரூபாய் மட்டுமே. அப்பொழுது இவர் தயாரிப்பாளர்கள் என்ன சம்பளம் கொடுக்கிறார்களோ அதை எந்தவித கேள்வியும் கேட்காமல் அப்படியே வாங்கி இருக்கிறார். அப்பொழுது இப்படத்தின் கதை ஆசிரியராக இருந்த பஞ்சு அருணாச்சலத்திடம் இவர் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.

Also read: ரஜினியை அசிங்கப்படுத்தய ஜெயிலர் படக்குழு.. காவாலா பாடலால் கொந்தளிக்கும் பிரபலம்

என்னுடைய அடுத்த படத்தில் இருந்து கொஞ்சம் 5000 ரூபாய் அதிகரித்துக் கொடுக்க முடியுமா என்று மிகவும் தயக்கத்துடன் கேட்டிருக்கிறார். அப்பொழுது பஞ்சு அருணாச்சலம் ஏன் இவ்வளவு தயங்கி கேட்கிறாய், வெளியில் உன்னுடைய மார்க்கெட் என்ன என்று உனக்கு தெரியாதா? உன்னுடைய படத்திற்காக விநியோகஸ்தர்கள் அடியும் பிடியுமாக சண்டை போட்டு வாங்கி கொள்கிறார்கள்.

அதனாலேயே உன்னுடைய மார்க்கெட் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது தெரியாமல் வெறும் 5000 ரூபாய்க்கு இவ்வளவு யோசனையுடன் தயக்கமாக கேட்கிறாய் என்று கூறியிருக்கிறார். சரி விடு இதுவரை நடித்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் உன்னை ஏமாற்றியதாக இருக்கட்டும்.

Also read: ஒதுங்கிய ரஜினி, இறங்கிய அர்ஜுன்.. 23 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்

இனிமேலும் நீ எந்த காரணத்தைக் கொண்டும் ஏமாறக்கூடாது என்று சொல்லி உன்னுடைய அடுத்த படத்திற்கான முரட்டுக்காளை படத்திற்கு தயாரிப்பாளரிடம் சொல்லி சம்பளத்தை கூட்டி கொடுக்க சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதன்படியே இவர் நடித்த முரட்டுக்காளை படத்தில் ஏவிஎம் புரோடக்ஷன் தயாரிப்பாளரிடம் சொல்லி இவருடைய சம்பளத்தை கூட்ட சொல்லி இருக்கிறார்.

அதன்படி இப்படத்தின் மூலம் இவருடைய சம்பளம் ஒரு லட்ச ரூபாய் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் பஞ்சு அருணாச்சலம் ஒரு லட்ச ரூபாய் வேண்டாம் அதற்கு பதில் 1,10,000 வச்சுக்கோ என்று கொடுத்திருக்கிறார்கள். அதே மாதிரி இப்படம் இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது .

Also read: மொய்தீன் பாய்க்கு குட்பை சொன்ன ரஜினி.. ட்ரெண்டாகும் புகைப்படம்

- Advertisement -

Trending News