விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இந்த மாதம் ஓடிடி தளத்திலும் வாரிசு மற்றும் துணிவு படம் ரிலீஸ் ஆகுவதால், இதை வைத்து பெத்த லாபம் பார்த்து விடலாம் என பிரபல ஓடிடி தளங்கள் பேரார்வத்துடன் காத்திருந்தனர்.
ஆனால் தற்போது இருக்கும் நிலவரத்தை பார்த்ததும், அந்த நிறுவனங்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கின்றனர். ஏனென்றால் வழக்கம் போல் புதுப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆட்டம் காட்டும் தமிழ் ராக்கர்ஸ் தற்போது துணிவு மற்றும் வாரிசு படத்தையும் விட்டு வைக்கவில்லை.
Also Read: யார் NO-1 பிரச்சினை உங்களால தான்.. நீங்க வாயை மூடிட்டா போதும் பயங்கர காட்டத்தில் சமுத்திரக்கனி.!
அஜித்தின் துணிவு நெட்ஃப்ளிக்ஸில் பிப்ரவரி 8 தேதியும், வாரிசு அமேசானில் பிப்ரவரி 22 ஆம் தேதியும் வெளியிட அறிவிப்பு வந்துள்ளது. ஆனால் தற்பொழுது வாரிசு மற்றும் துணிவு படங்கள் தமிழ் ராக்கர்ஸில் வெளிவந்துள்ளது. அதுவும் யாரும் எதிர்பாராத ஹெச்டி(HD) தரத்தில் வெளிவந்துள்ளது.
இனிமேல் இந்த படத்தை அமேசான் மற்றும் நெட்ஃப்ளிக்ஸில் யாரும் பார்க்க முன்வர மாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரும் இந்த படத்தை டவுன்லோட் செய்து வருகின்றனர். அதிக விலைக்கு இந்த இரு படங்களையும் படப்பிடிப்பு நடக்கும்போதே வாங்கிய ஓடிடி தளங்கள் தற்போது தலையில் துண்டை போட வேண்டிய நிலைமையில் உள்ளனர்.
ஆகையால் பல கோடிகளைக் கொட்டி கொடுத்து வாரிசு மற்றும் துணிவு படங்களை வாங்கிய ஓடிடி நிறுவனம் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. இந்த குற்றச்சாட்டை பற்றி எத்தனையோ தயாரிப்பாளர்கள் முன் வைத்தாலும் தமிழ் ராக்கர்ஸை மட்டும் அடக்க ஆளில்லாமல் போனது.
மேலும் துணிவு படத்தை இயக்கிய ஹெச் வினோத் படம் வெளியான அடுத்த நாள் சபரிமலைக்கு சென்றிருந்தார். அப்பொழுதே இந்த இரு படங்களின் முழு படத்தையும் மொபைலில் ஒரு நபர் வைத்திருந்தார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: வாரிசால் சாக்லேட் பாய்க்கு அடித்த அதிர்ஷ்டம்.. கோலிசோடா இயக்குனருடன் இணையும் கூட்டணி