முகத்தை வெளியில் காட்ட முடியாமல் தவிக்கும் சமந்தா.. காரணத்தைக் கேட்டு பதறும் திரையுலகம்

Actress Samantha: எத்தனையோ பிரச்சனைகள் வந்த போதெல்லாம் அதை தைரியமாக சமாளித்த சமந்தா இப்போது முகத்தை வெளியில் காட்ட முடியாத அளவுக்கு தவித்துக் கொண்டிருக்கிறாராம். அதற்கான காரணம் தான் இப்போது பகீர் கிளப்பி இருக்கிறது.

அதாவது அவர் கடந்த பல மாதங்களாகவே மையோசிடிஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே அவர் கமிட்டான பல படங்களில் இருந்தும் விலகினார்.

Also read: சமந்தாவின் காதல் காவியத்தை சுக்கு நூறாக்கிய ஜவான்.. முதல் நாள் என்ட்ரியிலேயே காலியான குஷி

இருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த குஷி அவருக்கான நல்ல கம்பேக்காக இருந்தது. இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்பு ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய போது அதிர்ச்சி தரும் விஷயம் ஒன்றை வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதாவது தனக்கு இருந்த உடல் பிரச்சனையால் அவர் அளவுக்கு அதிகமான ஸ்டிராய்டை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதன் விளைவாக தற்போது அவருடைய சருமம் பல பாதிப்புகளை அடைந்துள்ளதாம். இது பற்றி கூறிய அவர் என் முகத்தை வெளியில் காட்டக்கூட முடியவில்லை.

Also read: கவர்ச்சி ஆட்டத்திற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்

இப்போதும் ஃபில்ட்டர் உபயோகித்து தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என வேதனையுடன் தெரிவித்தார். அந்த அளவுக்கு இந்த நோயின் வீரியம் கடுமையாக இருக்கிறதாம். இதுதான் இப்போது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் கலங்கடித்திருக்கிறது.

ஏற்கனவே இந்த பிரச்சினையால் சமந்தா அளவுக்கு அதிகமான வெளிச்சத்தை பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து விஜய் தேவரகொண்டா மேடையிலேயே உருக்கமாக தெரிவித்து இருந்தார். இது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் அவர் அதையெல்லாம் கடந்து சிங்க பெண்ணாக வருவார் என ரசிகர்கள் ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகின்றனர்.

Also read: 2வது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா.. நாசுக்காக பதிலளித்த சமந்தா

- Advertisement -