காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

டிஆர்பி-யில் டாப் 10 இடத்தில் இருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகி அந்த சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் அடைந்தது மட்டுமல்லாமல், அவர் அந்த வீடியோவில் சோகமாக பேசியதால் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து கதாநாயகி சந்தியா கேரக்டரில் நடித்து வரும் ரியா தற்போது சீரியலை விட்டு விலகுவதாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசா கர்ப்பமாக இருந்த காரணத்தால் சீரியலை விட்டு விலகினார்.

Also Read: நீ அடங்க மாட்டியா காந்தாரா சரவணா.. மிச்சர், பூந்தி வித்தவனுக்கு ஏண்டா இவ்வளவு பில்டப்

அதன் பிறகு இதில் வில்லியாக நடித்த அர்ச்சனாவும் விலகினார். இப்படி அடுத்தடுத்து சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் விலகுவது ராஜா ராணி 2 சீரியலின் டிஆர்பி-க்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் இதில் கடந்த சில நாட்களாகவே காந்தாரா படத்தை அப்படியே காப்பி அடிப்பது போல் சீரியலின் கதாநாயகன் சரவணன் மாறி விடுவது சின்னத்திரை ரசிகர்களை எரிச்சலடைய வைக்கிறது.

இப்போது சீரியலின் ஹீரோயினும் ஒரு வருட காலம் முடிவடைந்தது என மூட்ட முடிச்ச கட்டிக்கொண்டு கிளம்புவது மேலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவருக்கு பதில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ராமன் தேடிய சீதை சீரியலின் கதாநாயகி ஆஷா கௌடா இனிவரும் நாட்களில் சந்தியாவாக நடிக்கப் போகிறார்.

Also Read: 3 பேரை கழட்டி விட்டு புது காதலனுடன் கமிட்டான ஆயிஷா.. இதாவது கல்யாணத்தில் முடிஞ்சா சரிதான்

மேலும் ரியா புதிய சீரியலில் நடிக்கப் போவதாகவும் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதால், அவர் எந்த சேனலுக்கு செல்கிறார், எந்த சீரியலில் நடிக்கிறார் என்பதை குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் அவரிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன் ரியா லைவ் வீடியோவில் பேசும்போது அழுவது போல் சோகமாக பேசியிருந்தால் ராஜா ராணி 2 சீரியலில் அவருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்குமோ என்றும், அது என்ன என்பதையும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Also Read: காதலர் தினத்திற்கு படுமோசமான புகைப்படம் வெளியிட்ட தர்ஷா.. அடுத்த சன்னி லியோன் நீங்க தான்

- Advertisement -