வெறித்தனமாக வெளியான வாத்தி பட போஸ்டர்.. தளபதியுடன் மல்லுக்கு நிற்கும் தனுஷ்

தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாத்தி. இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் தீபாவளி பண்டிகையான இன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறது. இந்த போஸ்டரில் தனுஷ் ஆக்ஷன் ஹீரோவாக வில்லனின் வயிற்றில் முழங்கால் போட்டு குத்து விடுவதுபோல் மாஸ் காட்டியிருக்கிறார்.

Also Read: படிப்பை பிரசாதம் மாதிரி குடுங்க, வியாபாரமாக்கி வித்துடாதீங்க.. அடிதடியில் தனுஷின் வாத்தி டீசர்!

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வாத்தி படத்தில் தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்த கென் கருணாஸ், சாய்குமார், தனிக்ககெல்லா பரணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் வாத்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. விஜய், சிவகார்த்திகேயனை தொடர்ந்து தற்போது தனுஷும் முதல்முறையாக டோலிவுட்டில் வாத்தி படத்தின் மூலம் கால்பதிக்க உள்ளார்.

Also Read: விட்டதைப் பிடிக்க வெறிகொண்டு காத்திருக்கும் தனுஷ்.. 120 நாள் குத்தகைக்கு எடுத்த இயக்குனர்

தனுஷின் வாத்தி படத்தை போன்றே தளபதி விஜயின் வாரிசு படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது.  அதில் விஜய் கருப்பு உடையில் சுத்தியல் உடன் செம கெத்து காட்டுகிறார் விஜய். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் வாரிசுக்கு முன்பே டிசம்பர் 2-ஆம் தேதி வாத்தி வெளியாக உள்ளது. எனவே ரசிகர்களின் மத்தியில் இந்த இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் புதிதாக வெளியாகி இருக்கும் வாத்தி படத்தின் இந்தப் போஸ்டர் ஆனது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது போஸ்டர்களும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

vaathi-movie-poster-cinemapettai
vaathi-movie-poster-cinemapettai

Also Read: தீபாவளியன்று சரவெடியாய் வெளிவந்த வாரிசு போஸ்டர்.. சம்பவம் செய்யும் தளபதி

- Advertisement -