Connect with us
Cinemapettai

Cinemapettai

vaathi-teaser

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படிப்பை பிரசாதம் மாதிரி குடுங்க, வியாபாரமாக்கி வித்துடாதீங்க.. அடிதடியில் தனுஷின் வாத்தி டீசர்!

தனுஷ் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது சினிமாத்துறையில் தனுஷின் அசுர வளர்ச்சியை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

இதுதவிர நானே வருவேன், கேப்டன் மில்லர் ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் சார் என்றும், தமிழில் வாத்தி என்றும் பெயரிடப்பட்டுள்ள படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கியுள்ளார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வாத்தி படத்தில் தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்த கென் கருணாஸ், சாய்குமார், தனிக்ககெல்லா பரணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் வாத்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் தற்போது வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

படிப்பை பிரசாதம் மாதிரி குடுங்க, 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விக்காதீங்க என மாசான டயலாக்குகளை தனுஷ் தெறிக்கவிடுகிறார். விஜய், சிவகார்த்திகேயனை தொடர்ந்து தற்போது தனுஷும் முதல்முறையாக டோலிவுட்டில் வாத்தி படத்தின் மூலம் கால்பதிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று முழுவதும் தனுஷின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி உள்ளது. திருச்சிற்றம்பலம் படத்திற்காக காத்திருந்த நிலையில் தற்போது வாத்தி படத்தின் டீசர் வெளியாகி தனுஷ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. அதுமட்டுமன்றி மனுஷன் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் பின்னிப் பெடல் எடுத்து வருகிறார்.

Continue Reading
To Top