சுதந்திர தினத்தன்று விசிட் கொடுத்த இந்தியன் தாத்தா.. வைரலாகும் போஸ்டர்

Indian 2: ஷங்கர் இயக்கத்தில் லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றதன் காரணமாக பல வருடம் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க ஷங்கர் முடிவு செய்திருந்தார். மேலும் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களினால் ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டிருந்தது. இப்போது விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தியன் 2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்தியன் 2  அடுத்த பாகத்தையும் ஷங்கர் எடுத்து வருகிறாராம்.

Also Read : அஜித்தை விட 10 மடங்கு அதிகமா பயமுறுத்தும் போலா ஷங்கர்.. சர்ச்சையை கிளப்பி, வாயை புண்ணாக்கிய இயக்குனர்

இது ரசிகர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த சூழலில் இந்தியன் படம் வெளியான போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கமலின் வயதான கெட்டப் தான். ரசிகர்களால் இந்தியன் தாத்தா என்று அழைக்கப்பட்ட சேனாதிபதி கதாபாத்திரம் இன்று வரை நின்று பேசுகிறது.

இப்போதும் இந்தியன் 2 படப்பிடிப்பில் சேனாதிபதி கதாபாத்திரத்திற்காக கமல் பல மணி நேரம் மேக்கப் போடுகிறாராம். ஏற்கனவே படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது. மேலும் இந்தியன் படத்தில் சேனாதிபதியின் கதாபாத்திரம் சுதந்திரப் போராட்ட வீரராக தான் எடுக்கப்பட்டிருந்தது.

Also Read : கை மீறி போனதால் மகளுக்கு கடிவாளம் போட்ட ஷங்கர்.. விரக்தியில் எடுத்த அதிரடி முடிவு

இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 சேனாதிபதி கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி இருக்கிறது. மேலும் கமலின் அந்த கெட்டப் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. இப்போது இந்தியன் 2 போஸ்டர் ரசிகர்களால் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சுதந்திர தினத்தன்று விசிட் கொடுத்த இந்தியன் தாத்தா

indian2-kamal
indian2-kamal

சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கடைசியாக கமலின் விக்ரம் படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் இந்தியன் 2 படத்தையும் நிச்சயம் வெற்றி படமாக ஷங்கர் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Also Read : தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த ஷங்கர்.. கேம் சேஞ்சர்னு பார்த்தால் மொத்த காசும் போயிடும் போல

Sharing Is Caring:

அதிகம் படித்தவை