தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்த ஷங்கர்.. கேம் சேஞ்சர்னு பார்த்தால் மொத்த காசும் போயிடும் போல

90களில் இருந்து தன்னுடைய படங்களில் புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் தான் இயக்குனர் சங்கர். அதுவும் இப்பொழுது பிரம்மாண்டத்தையும் விட மிரளவைக்கும் பிரம்மாண்டத்தில் இறங்கிவிட்டார். பொதுவாகவே தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார் சங்கர்.

ஏற்கனவே இவர் கமலஹாசனை வைத்து படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தில் கமலை முப்பது வயது இளைஞனாக காண்பிப்பதற்காக  அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கு இருக்கும் ஒரு டெக்னாலஜியை வைத்து கமலை இளமையாக காட்டப் போகிறார் . அந்த ஒரு டெக்னாலஜிக்கு மட்டுமே அவர் பல கோடிகளை செலவு செய்துள்ளார்.

Also Read: சரத்குமார் சங்கை பிடித்த இருவர்.. இக்கட்டான சூழ்நிலையில் சங்கரை விட்டுக் கொடுத்த சுப்ரீம் ஸ்டார்

இப்பொழுது அவர் இயக்கும் மற்றொரு படத்திற்கு 100 கோடிகள் பாட்டுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. பெரும் பொருட் செலவில் இயக்குனர் சங்கர் ராம்சரணை வைத்து இயக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். 

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.  இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதைகளத்தில் உருவாகி வருகிறது. படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் இணைந்த பிரபலங்களின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வைத்திருக்கிறது.

Also Read: தில்ராஜுக்கு 90 கோடி வேட்டுவைத்த சங்கர்.. கேம் சேஞ்சர் படத்தால் விழி பிதுங்கும் தயாரிப்பாளர்

அதற்கேற்றார் போல் இப்போது பாடலுக்கு மட்டும் 100 கோடியை வாரி இறைத்திருப்பது பலரையும் வாயடைக்க வைத்துள்ளது. அது மட்டுமல்ல படத்தின் பாடலுக்கு மட்டும் ஒரு படத்தின் பட்ஜெட்டையே செலவு செய்கிறார்களே, இது ஆண்டவனுக்கே அடுக்குமா! என்றும்  பல தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை வைத்து வசை பாடுகின்றனர்.

இப்போது சோசியல் மீடியாவில் இந்த தகவல் தான் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. சங்கர், தயாரிப்பாளர் தலையில் மிளகா மட்டும் இல்ல மொத்த மசாலாவையும் சேர்த்து வைத்து அரைக்கிறார். கேம் சேஞ்சர்னு பார்த்தால் மொத்த காசும் போயிடும் என்று நெட்டிசன்களும் இந்த விஷயத்தை வைத்து கிழித்து தொங்க விடுகின்றனர். 

Also Read: இந்தியன் 2 படத்தில் சூதனமான உதயநிதி.. மொத்தமாக இடி விழுந்தது போல் நொறுங்கிய ஷங்கர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்