டிடிஎஃப் வாசன் கைதுக்கு பின்னால் இருக்கும் அரசியல்.. அதிகாரத்தில் இருந்தால் நீ யோக்கியமா.? இது என்ன சார் உங்க சட்டம்

TTF Vasan: யூடியூபர் டிடிஎஃப் வாசன் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் சாகசம் செய்து பிரபலம் அடைந்த இவர் சமீபத்தில் அதிவேகமாக வீலிங் செய்து விபத்தில் சிக்கினார்.

அதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் சிகிச்சைக்கு பிறகு பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார். அதை அடுத்து ஜாமீனில் வந்த இவருக்கு 10 ஆண்டுகள் வரை பைக் ஓட்ட தடை விதித்து ஓட்டுநர் உரிமத்தை நீதிமன்றம் ரத்து செய்தது.

அதனால் இப்போது அவர் காரில் பயணிக்கும் வீடியோவை தான் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மதுரையில் இவர் செல்போன் பேசியபடி அதிவேகமாக காரை ஓட்டி இருக்கிறார்.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது கவனக்குறைவாக ஓட்டியது செல்போன் பேசியபடி ஓட்டியது என ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது பரபரப்பை கிளம்பி வரும் நிலையில் நெட்டிசன்கள் வேறு சில சம்பவங்களையும் முன்வைத்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது யூடியூபர் இர்பானின் கார் சில மாதங்களுக்கு முன்பு ஒரு மூதாட்டி மீது மோதி அவர் உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன்

இதில் இர்பான் தான் கார் ஓட்டினார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் டிரைவர் தான் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சமீபத்தில் கூட இவர் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என துபாயில் போய் தெரிந்து கொண்டு ஒரு பார்ட்டி வைத்து கொண்டாடினார். இதற்கு கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியது.

ஆனால் அவர் அந்த வீடியோவை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டதால் இந்த விவகாரம் அப்படியே முடிந்தது. அதேபோன்று தான் இவர் உதயநிதியை ஒரு முறை பேட்டி எடுத்திருந்தார்.

அப்போது உதயநிதி கார் ஓட்டியபடி இவரின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். இது எந்த விதத்தில் நியாயம். இப்போது மட்டும் கவனக்குறைவால் விபத்து ஏற்படாதா? என நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

மேலும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நியாயம் சாமானிய மக்களுக்கு ஒரு நியாயமா? என்னங்க சார் உங்க சட்டம் என்ற கருத்துக்களும் தீயாக பரவி வருகிறது. இதில் டிடிஎஃப் வாசன் செய்தது தவறு என்றால் மேற்கண்ட சம்பவங்களும் தவறு தானே. அதை ஏன் சட்டம் கவனிக்கவில்லை என்பது தான் பலரின் குரலாக இருக்கிறது.

யூடியூபர் இர்ஃபான் செய்தது சரியா.?

- Advertisement -