வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தலைகால் புரியாமல் ஆடும் தம்பி குடும்பம்.. இறுதிக்கட்டத்தை நெருங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் போகப் போக பார்ப்பவர்களை போர் அடிக்க செய்தது. ஒரு கட்டத்தில் கதையை இல்லாமல் கொஞ்ச நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது. பின்பு அரச்ச மாவையே அரைக்கிற மாதிரி இருந்தது. இதை மாற்றி விறுவிறுப்பாக கொண்டு போக வேண்டும் என்று நினைத்து குடும்பத்திற்குள்ளேயே மனக்கசப்பை உண்டாக்கி ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரிந்து போகிற மாதிரி ஆகிவிட்டது.

தற்போது கண்ணன் பேங்க் மேனேஜர் என்பதால் சம்பாதிக்கும் திமிரில் தனியாக குடித்தனம் சென்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இனிமேல் தனியாகவே வாழலாம் என்று முடிவு எடுத்து வாழ தொடங்கி விட்டார்கள். அதற்காக ஐஸ்வர்யா வீட்டிற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் இஎம்ஐ மூலம் வாங்கி விடுகிறார். அதுமட்டுமல்லாமல் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று கண்ணனுடைய பணத்தை காலியாகுற வரை டாம் டும்னு செலவழித்து விடுகிறார்.

Also read: ரஞ்சித்தை பார்த்து காண்டாகிய கோபி.. மனதிற்குள்ளே புலம்பித் தவித்த நிலைமை

இதையெல்லாம் பார்த்த கண்ணன் இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல அப்படிங்கிற மாதிரி ரியாக்ஷன் கொடுத்து இருக்கிறார். கண்ணன் வேலை பறிபோக வேண்டும் அப்ப தான் குடும்பம் என்றால் இவர்களுக்கு புரியும் அப்பொழுது தான் திருந்துவார்கள் என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் நடவடிக்கை இருக்கிறது. இப்பதான் புரியுது பழைய ஐஸ்வர்யா ஏன் இந்த சீரியலில் இருந்து போனார்கள் என்று ஏன்னா இந்த கதைக்கு ஏற்றபடி ஐஸ்வர்யா மேல் அதிகப்படியான கோபம்தான் மக்களிடம் இருந்து திரும்புகிறது. நல்ல வேலை அந்த ஐஸ்வர்யா எஸ்கேப் ஆகிவிட்டார் என்றே சொல்லலாம்.

அடுத்தபடியாக கதிர் மற்றும் முல்லை, மீனாவின் அப்பா வீட்டிற்கு வந்து கயல் பாப்பாவை நாங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா என்று கேட்க அதற்கு மீனா இது என்ன கேள்வி நீங்க தாராளமா கூட்டிட்டு போகலாம் என்று சொல்கிறார். பின்பு கயிலை பார்த்த தனம் பாசத்தை வெளிக்காட்டி உணர்ச்சிபூர்வமாக பொங்குகிறார். அடுத்ததாக இப்படியே ஜீவாவும் மீனவும் கூடிய சீக்கிரத்தில் வீட்டிற்கு திரும்பி வருவார்கள் என்று கதிர் அண்ணியிடம் வாக்குறுதி கொடுக்கிறார்.

Also read: அப்பத்தாவின் சூழ்ச்சி வலையில் சிக்குவாரா குணசேகரன்.. 40% பங்கை கேட்கும் எஸ் கே ஆர் குடும்பம் திருப்பி செய்யும் கர்மா

அடுத்ததாக கதிர் கயிலை மீனா வீட்டுக்கு கொண்டு வந்து விட வருகிறார். அப்பொழுது மீனாவின் அம்மா கயல் உங்க கூட இருந்துகிட்டாளா என்று கேட்க அதற்கு கதிர் இங்கு கூட இருந்தவள் தானே அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. மறந்திட கூடாதுன்னு தான் அடிக்கடி தூக்கிட்டு போய் பார்க்கிறோம் என்று சொல்கிறார். அடுத்ததாக ஜீவாவிடம் கதிர் நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்கிறார். அவரும் எந்த வித கோபத்தையும் காட்டாமல் பொறுமையாக பதில் அளிக்கிறார்.

இதை பார்த்து காண்டான மீனாவின் அப்பா குதர்க்கமாக பேசி கதிரை காயப்படுத்த நினைக்கிறார். ஆனால் எதற்குமே அஞ்சாத கதிர் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியதுதான் பெரிய ஹைலைட்டாக இருக்கிறது. அடுத்ததாக அவர் இந்த குடும்பம் பிரிந்தது பிரிந்ததாகத்தான் இருக்கும் மறுபடியும் ஒட்ட முடியாது என்று கூற அதற்கு கதிர் இது இப்படியே நிரந்தரம் கிடையாது மறுபடியும் நாங்கள் ஒன்று சேர்வோம் என்று சவால் விடும் விதமாக பேசுகிறார்.

Also read: 90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் 5 தொகுப்பாளர்கள்.. நீங்கள் கேட்ட பாடல் முதல் பெப்சி உமா வரை

- Advertisement -

Trending News