புகழ் போதையில் ஜெமினியை கழட்டிவிட்ட நடிகை.. மறைக்கப்பட்ட நடிகையர் திலகத்தின் மறுபக்கம்

தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் தான் ஜெமினிகணேசன். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அவர் நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாகத் தான் இருந்தார். ஏனென்றால் அவரை சுற்றி எப்போதுமே பெண்கள் கூட்டம் இருக்குமாம். அது மட்டுமல்லாமல் அவருக்கு நான்கு மனைவிகள் என்று சொல்லப்பட்டாலும் கணக்கில் இல்லாத சிலரும் இருக்கிறார்கள்.

இப்படி அவர் ஒரு பிளேபாய் ஆகவே நமக்கு காட்டப்பட்டிருக்கிறார். ஆனால் உண்மையாகவே இவர் எந்த பெண்களையும் தேடி சென்றதே கிடையாதாம். மாறாக தன்னைத்தேடி வருபவர்களுடன் தான் அவர் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடிகையர் திலகம் சாவித்திரியின் மீது நிஜமான அன்பு கொண்டு திருமணம் செய்து இருக்கிறார்.

Also read: சாம்பார் என ஜெமினிக்கு பெயர் வந்ததன் ரகசியம்.. பல வருட ரகசியத்திற்கு கிடைத்த பதில்

சில காலங்கள் வரை நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய வாழ்வில் திடீரென சறுக்கல் ஏற்பட்டது. அதாவது ஜெமினியின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து இருக்கிறது. அதே நேரத்தில் சாவித்திரியின் புகழும் உச்சத்தில் இருந்துள்ளது. அந்த புகழ் போதையின் காரணமாகவே அவர் ஜெமினியிடம் இருந்து சிறிது சிறிதாக விலக ஆரம்பித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சக நடிகர்களுடன் நட்பு, குடிப்பழக்கம் என்று அவருடைய போக்கு முற்றிலுமாக மாறி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இனி ஜெமினி தனக்கு தேவையில்லை என்று அவரை உதாசீனப்படுத்தி இருக்கிறார். அதனால் வேறு வழி இல்லாமல் ஜெமினி கணேசனும் சாவித்திரியை விட்டு பிரிந்திருக்கிறார்.

Also read: வாயில் துப்பாக்கி குண்டுகளுடன் மருத்துவமனையில் ஜெமினி கணேசன்.. மறைக்கப்பட்ட மர்மம்

உண்மையில் இதுதான் நடந்திருக்கிறது. ஆனால் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அது அப்படியே வேறு விதமாக காட்டப்பட்டிருக்கிறது. இதை பார்க்கும் போது எனக்கு வயிறு பற்றி எரிந்தது என ஜெமினிக்கு நெருக்கமாக இருந்த டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார். இவர் எம்ஜிஆர் ஆட்சியில் சபாநாயகராக இருந்த ராஜாராமின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

மேலும் சாவித்திரியின் இறுதி காலத்தில் அவருடைய நிலையை பத்திரிகைகளில் தெரிந்து கொண்டு தான் ஜெமினி அவருக்கு உதவி செய்தார் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருடைய இன்னொரு மனைவி புஷ்பவல்லியும் இவரை ஒதுக்கிவிட்டு சென்றதாகவும் குறிப்பிட்டார். இப்படி இவரை தேடி வந்த பெண்களே இவரை கழட்டி விட்டு சென்ற கதைதான் நடந்திருக்கிறது. ஆனால் உலகத்தின் பார்வையில் இவர் ஒரு காதல் மன்னனாக சித்தரிக்கப்பட்டது தான் சோகம்.

Also read: சாவித்திரி வீட்டில் திருடு போன 100 சவரன் நகைகள்.. தீராத விரக்தியால் நடிகையர் திலகம் எடுத்த முடிவு

- Advertisement -