வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறும் கல்லுளிமங்கன்.. அசிமிக்கு இவ்வளவா? அதிர்ச்சியை கிளப்பிய ஓட்டிங் லிஸ்ட்

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் ஷோவானா பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளதால், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் தினம் தோறும் ஒளிபரப்பாகிறது. இதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் 6 பேரில் யார் வெளியேற்றப்படுவார் என்பதை உறுதி செய்யும் ஓட்டிங் லிஸ்ட் தற்போது கடைசி நிமிடத்தில் அதிரடி ட்விஸ்ட் உடன் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் திடீரென்று ராம் மற்றும் ஆயிஷா இருவரையும் டபுள் எவிக்ஷன் செய்து வெளியேற்றினார்கள். ஆகையால் இந்த வாரத்திற்கான எவிக்சன் குறித்த பதட்டம் போட்டியாளர்களிடம் நிலவிவரும் நிலையில், நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஜனனி, ஏடிகே, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரக்ஷிதா உள்ளிட்டோருக்கு மக்கள் இந்த வாரம் முழுவதும் ஓட்டுக்களை வழங்கினார்கள்.

Also Read: இணையத்தை தெறிக்க விடும் இந்த வார டிஆர்பி லிஸ்ட்.. வந்த வேகத்திலேயே டஃப் கொடுக்கும் புது சீரியல்

இதில் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து இப்போது வரை பிக் பாஸ் வீட்டின் கலவரங்களுக்கு காரணமாக இருக்கும் அசீம், இந்த சீசனின் கண்டன்ட் கொடுக்கும் நபராக இருக்கிறார். ஆகையால் இவருக்கும் ரசிகர்கள் நல்ல சப்போர்ட் கொடுத்து, ஓட்டுக்களையும் வாரி வழங்கி உள்ளனர். ஆகையால் இந்த 6 பேரில் அசீமுக்கு தான் அதிக ஓட்டுகள் கிடைத்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த சீசனில் ஓரளவு நியாயம் பேசக்கூடிய நபராக இருக்கும் விக்ரமனுக்கு 2-ம் இடமும், சீசன் 6-ன் செம க்யூட்டான போட்டியாளராக வலம் வரும் ஜனனி 3-ம் இடமும், ஏடிகே ஓட்டுக்களின் அடிப்படையில் 4-ம் இடமும் கிடைத்துள்ளது. இதில் கடைசி இரண்டு இடங்களை மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்றிருக்கும் சீரியல் நடிகை ரக்ஷிதா மற்றும் மணிகண்டன் இவர்களுக்கிடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

Also Read: டைட்டில் வின்னர் இவர்தான்.. ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என விமர்சித்த சீசன் 6 போட்டியாளர்

இவர்களது ஓட்டு வித்தியாசம் மிக குறைவு தான். கம்மி ஓட்டின் அடிப்படையில் இந்த வாரம் இவர்கள் இருவரும் ஒருவர் வெளியிடப் போகிறார். இதில் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகை ரக்ஷிதா குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் இந்த வாரம் எஸ்கேப் ஆகிவிட்டார் அதனால் மணிகண்டன் தான் வரம் எலிமினேட் ஆகப்போகும் நபர். கடந்த வாரம் கூட கமல் மணிகண்டனை வார்னிங் செய்தும் அவர் கேட்காமல் இப்போதும் மைனா நந்தினிவுடன் சில விஷயங்களில் ஒரு தலைப்பட்சமாக சப்போர்ட் செய்து வருகிறார்.

இது போட்டியாளர்கள் சிலரை பாதிக்கும் என்றும் ஆண்டவர் கடந்த எபிசோடில் குறிப்பிட்டும், அவர் அந்த குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் சளிப்படைந்த ரசிகர்கள் மணிகண்டனை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றும் முடிவுக்கு வந்துவிட்டனர். இவருடன் சேர்ந்து ஒரு தலை பட்சமாக பேசிக் கொண்டிருக்கும் நந்தினி இந்த வாரத்தின் தலைவர் என்பதால் அவரும் எஸ்கேப் ஆகிவிட்டார்.

Also Read: 10 வாரமும் நாமினேஷன் லிஸ்டில் வராத போட்டியாளர்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே சாதனை படைத்த அதிர்ஷ்டசாலி

அதிரடி மாற்றத்துடன் வெளியான இந்த வார பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட்

bb6-vote-list-cinemapettai
bb6-vote-list-cinemapettai
- Advertisement -

Trending News