செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அடுத்த ஆப்ரேஷன் டாக்டருக்கு தான்.. கட்டா குஸ்திகே டஃப் கொடுக்க கிளம்பும் கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் முதல் பாகம் முடிவடைந்து இரண்டாம் பாகம் விரைவில் துவங்கும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது போல் தெரிகிறது. கண்ணம்மாவை அசிங்கப்படுத்த வேண்டும் என பாண்டி தனக்கும் கண்ணம்மாவிற்கும் தகாத உறவு இருப்பதாக ஊரில் பரப்பி விட்டார்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கண்ணம்மாவும் பாண்டிக்கு ஆண்மை தன்மையே இல்லை என அசிங்கப்படுத்தினார். இதனால் கோபத்தில் பாண்டி மற்றும் பாரதிக்கு இருவரும் சண்டை ஏற்படுகிறது.

Also Read: பாரதிகண்ணம்மா சீசன் 2வில் தொலைந்து போன மகள்கள்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட கதைக்களம்

ஒரு கட்டத்தில் பாண்டி பாரதியை இரும்பாலான உருட்டு கட்டையால் கடுமையாகத் தாக்குகிறார். பலத்த காயமடைந்த பாரதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறுகிறார். பின் அவரை பார்க்க வந்த சௌந்தர்யாவை பார்த்து பாரதி, ‘நீங்க எல்லாம் யாரு?’ என கேட்டதும் குடும்பமே ஆடிப் போனது.

இப்படி மெமரி லாஸ் ஆனா பாரதியின் இந்த நிலைமைக்கு பாண்டி தான் காரணம் என்ற கோபம் கண்ணம்மாவுக்கு வருகிறது. இதன்பின் கட்டா குஸ்தி படத்தில் மனைவி கணவருக்காக குஸ்தி போடுவது போல் தற்போது கண்ணம்மாவும் வெறிகொண்டு கிளம்புகிறார்.

Also Read: 2023-லும் உருட்டும் பாரதிகண்ணம்மா.. அப்பனா இப்ப முடிக்க மாட்டாங்களா

மேலும் சீரியலில் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என சீரியலின் இயக்குனர், இப்படி எல்லாம் கதையின் போக்கை மாற்றுவதால் ரசிகர்கள் சலிப்படைந்து பாரதிகண்ணம்மா சீரியல் இனிமேல் பார்க்க கூடாது என மறந்து விடுவார்கள் போல தெரிகிறது.

இதனால் சீரியல் தற்போது முதலில் இருந்து துவங்க இருக்கும் திட்டம் இருப்பதால், சீக்கிரம் பாரதிகண்ணம்மா சீரியலை முடித்து விட்டால் போதும்டா சாமி என சோசியல் மீடியாவில் பாரதி கண்ணம்மா சீரியலை குறித்து கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Also Read: ஒரே கதையை வைத்து 2 சீரியல்களை உருட்டும் விஜய் டிவி.. இதுக்கெல்லாம் டிஆர்பி ரேட்டிங் ஒரு கேடு

- Advertisement -

Trending News