RRR படத்தோட வந்தாலும் அசால்ட் செஞ்சிருப்பாங்க.. பீஸ்ட் பத்தி கேட்டாலே தெறித்து ஓடுறாங்க

திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு தற்சமயம் மூன்று வெவ்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் எது மிகச் சிறந்தது என்பதை பற்றி சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த விவாதத்தில் ஏற்கனவே மார்ச் மாதத்தில் ரிலீசான SS ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

இதனுடன் நேற்று ரிலீசான தளபதியின் பீஸ்ட் திரைப்படமும், இன்று ரிலீஸ் ஆகி உள்ள ராக்கிங் ஸ்டார் யாஷ் உடைய கேஜிஎஃப் 2 திரைப்படத்தைக் குறித்து ரசிகர்கள் வெறித்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த மூன்று திரைப்படமும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்றாலும் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலேயே கேஜிஎஃப் 2 திரைப்படத்தை அதிகாலை 4 மணிக்கே பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் இந்தப் படம் ஆர்ஆர்ஆர் படத்துடன் கூட விட்டிருந்தாலும் அடிச்சு தூள் கிளப்பி இருக்கும்.

அப்படி இருக்கும்போது பீஸ்ட் திரைப்படத்தை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது. கேஜிஎஃப் 2 திரைப்படத்தை வேற எந்த திரைப்படதுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு வேற ரேஞ்சில் எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், இதுதான் உண்மையான பீஸ்ட் என்றும் கேஜிஎஃப் 2 திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வெறி கொண்டு திரையரங்கில் தொண்டை கிழிய கத்துகின்றனர்.

பொதுவாக அம்மா சென்டிமென்ட்டை அழுகையுடன் காண்பிக்கும் திரைப்படங்களை மட்டுமே இதுவரை பார்த்த சினிமா, அம்மாவின் பாசத்தை தூண்டுகோலாக பயன்படுத்தி வித்தியாசமாக காட்டியிருக்கும் கேஜிஎஃப் 2 திரைப்படத்தை ஒரு முறை என்ன, நூறு முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்  என ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கேஜிஎஃப் 2 ஒருசில தினத்திலேயே அசால்டாக ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை பெற்றுத்தந்து ஆர்ஆர்ஆர், பீஸ்ட் போன்ற படங்களை எல்லாம் ஓரம்கட்ட போகிறது, இருந்தாலும் ஆர்ஆர்ஆர், பீஸ்ட் போன்ற படங்கள் அந்த கதைக் களத்திற்கு ஏற்ப சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கேஜிஎஃப் 2 ரசிகர்கள் எதிர்பார்த்த அளவை மிஞ்சி, திரையரங்கில் எழுந்து போகவிடாமல் இருக்கையின் நுனியில் அமர்ந்தபடியே பார்க்க வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழ் படமான பீஸ்ட், கன்னட படமான கேஜிஎஃப் 2, தெலுங்கு படமான ஆர்ஆர்ஆர் இவை மூன்றும் வெவ்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டாலும் அனைத்தும் தமிழில் ஒட்டுமொத்தமாக ரிலீசாகி தமிழ் ரசிகர்களின் மனதில் கேஜிஎஃப் 2 மட்டுமே தற்போது கால் மேல் கால் போட்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்