Bhakkiyalaksmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனி மனசுலயும் செழியன் தான் இருக்கிறார் என்று ஜெனியின் அம்மா புரிந்து கொண்டார். இதனால் மகளின் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும் என்று பாக்யாவிடம் பேசுகிறார்.
பாக்யாவும், செழியனும் ஜெனியும் ஒரு முறை நேரில் சந்தித்து பேசினால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்று கூறுகிறார். உடனே ஜெனி அம்மா, நாளை இரண்டு பேரும் சந்திப்பதற்கு நான் ஏற்பாடு பண்ணுகிறேன். ஜெனியை நான் எப்படியாவது அவருடைய அப்பாக்கு தெரியாமல் கூட்டிட்டு வந்துவிடுகிறேன்.
நீங்களும் அதே இடத்திற்கு செழியனை கூட்டிட்டு வாருங்கள் என்று சொல்கிறார். உடனே பாக்கியா இருக்க அனைத்து தெய்வங்களிடமும் வேண்டி கொண்டு செழியனை புறப்பட வைக்கிறார். அதே மாதிரி எழிலும் அண்ணனை கிளப்பி கூட்டி வருகிறார்.
ஆனால் எங்க போகிறோம் என்று செழியன் கேட்ட பொழுது பாக்கியா எதுவுமே சொல்லவில்லை. அதே மாதிரி மற்றவர்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று எழிலிடம் சொல்லிவிட்டார். பிறகு இவர்கள் போகும் பொழுது பாக்யாவின் மாமியார், மாமனார் மற்றும் கோபி அனைவரும் பார்க்கிறார்கள்.
உடனே தாத்தா, பாக்யாவை கூப்பிட்டு எல்லோரும் எங்கே போகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பாக்யா ரெஸ்டாரன்ட் என்றும் எழில் ஒரு இடத்துக்கு போகிறோம் என்று மாத்தி மாத்தி பேசி சந்தேகத்தை உண்டாக்கி விட்டார்கள். இவர்கள் சொன்னதும் தாத்தா மற்றும் கோபி அனைவரும் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஜெனி எடுக்க போகும் முடிவு
பிறகு எப்படியோ இவர்களை பாக்யா சமாளித்துவிட்டு ஜெனி அம்மா சொன்ன இடத்திற்கு செழியனை கூட்டிட்டு போய்விடுகிறார். அதே மாதிரி ஜெனியையும் கிளப்பி அவருடைய அம்மா கூட்டிட்டு வருகிறார். ஆனால் இவர்கள் பேசும் பொழுது வில்லன் மாதிரி ஜெனி அப்பா உள்ளே நுழைந்து கலவரத்தை உண்டாக்கப் போகிறார்.
இதே பார்த்ததும் ஜெனி பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்து அப்பாவை தாறுமாறாக பேசி செழியன் தான் எனக்கு வேண்டும் என்று ஒன்று சேரப் போகிறார். ஆக மொத்தத்தில் பாக்யா செஞ்ச உருப்படியான ஒரு விஷயம் நல்லபடியாக முடியப்போகிறது.