அபிஷேக் ராஜா செஞ்ச பெரிய தப்பு இதுதான்.. அடித்துக் கூறிய ஆண்டவர்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இந்த வாரம் அபிஷேக் ராஜா மீண்டும் இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்டார். இவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது ஆரம்பத்திலேயே கலந்து கொண்ட அபிஷேக் ராஜா மூன்றாவது வாரமே எலிமினேட் செய்யப்பட்டார்.

அதன் பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்த அபிஷேக் ராஜா, இரண்டாவது முறையாக தற்போது எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். வெளியே வந்த அபிஷேக் ராஜா பிக்பாஸ் மேடையில் உலகநாயகன் கமல் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய கமல், அபிஷேக் ராஜா மீண்டும் இரண்டாவது முறை எலிமினேட் செய்யப்பட்டதற்கு இதெல்லாம் தான் காரணம் என்று பட்டியலிட்டார். முதல்முறை எலிமினேட் செய்யப்பட்டு வீடு திரும்பிய அபிஷேக் ராஜா, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கவே இல்லை.

இரண்டாவது முறையாக வீட்டில் நுழைந்த பின் போட்டியாளர்களுடன் அடித்துப் பேசினார்.  ஒருவேளை அவர் வீட்டிற்கு சென்றபோது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து இருந்தால், அவர் செய்த தவறு என்ன என்பது அபிஷேக் ராஜாவிற்கு புரிந்திருக்கும்.

அந்த தவறுகளை மாற்றிக்கொண்டு மக்களுக்கு பிடித்தமான வகையில் இரண்டாவது முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கலாம். அப்படி செய்ய அபிஷேக் ராஜா தவறிவிட்டார்.

மீண்டும் தற்போது எலிமினேட் செய்து வீடு திரும்பிய அபிஷேக் ராஜா கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக நீங்கள் வரும் காட்சியை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று கமல் அபிஷேக் ராஜாவை கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார்.

எனவே நேற்றைய பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில்  ஆண்டவர் அபிஷேக் ராஜாவிற்கு செவிட்டில அடித்தாற்போல் சொன்ன அறிவுரைக்கு பிக்பாஸ் ரசிகர்களிடமிருந்து எக்கச்சக்கமான பாராட்டுகள் குவிகிறது

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்