வெண்பாவை கிழித்து தொங்கவிட்ட மனுஷன்.. என்ன பொசுக்குனு இப்படி அசிங்க படுத்திட்டாரு!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களாக தன்னுடைய அப்பா யாரென்று லட்சுமி தெரியாமல் இருந்த நிலையில், கண்ணம்மாவின் பிறந்தநாளன்று லட்சுமியிடம் அப்பாவை காட்டப் போவதாக கண்ணம்மா சொல்லியிருப்பது சீரியலை விருவிருப்பாக்கி உள்ளது.

இந்நிலையில் கண்ணம்மா வீட்டிலிருந்து கோபத்துடன் கிளம்பிய பாரதி, வெண்பா வீட்டில் தங்கலாம் என்று அங்கு சென்றார். ஆனால் கண்ணம்மா பக்கா பிளான் போட்டு அங்கிருந்து பாரதியை துரத்திவிட்டார். மீண்டும் பாரதி, சௌந்தர்யா வீட்டிற்கு தன்னுடைய மகளுடன் வந்துவிட்டார்.

இந்த சூழலில் பாரதியுடன் சேர்ந்து தன்னுடைய வீட்டில் இருக்கப் போகிறோம் என்ற ஆசையில், கட்டிய கனவு கோட்டையை தரைமட்டமாக்கிய கண்ணம்மாவை வெறுப்பேற்றுவதற்காகவே அனுதினமும் கண்ணம்மா போகும் கோவிலுக்கு பாரதியை அழைத்துக்கொண்டு வெண்பா சென்றுள்ளார்.

அங்கே கண்ணம்மாவை பார்த்ததும் வெண்பா பாரதியுடன் கொஞ்சிக் குழம்புகிறார். பிறகு அங்கு வந்த கோயில் நிர்வாகி ஒருவர் வெண்பாவிடம், ‘நீங்கள் டாக்டர் வெண்பா தானே’ என்று கேட்டார். ஆம் என்று கெத்து காட்டிய வெண்பா, உங்களுக்கு ஏதாவது மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் ஹாஸ்பிடலுக்கு வாங்க என்று பெருமை பீத்துகிறார்.

உடனே கோயில் நிர்வாகி, ‘நீ தான காச வாங்கிட்டு பச்சைக் குழந்தையை கருவிலேயே அழித்த டாக்டர். உன்கிட்ட வைத்தியம் பாக்குறதுக்கு சுடுகாட்டில் போய் படுத்துக்கலாம். உன்னுடைய கால் பட்டால் இந்தக் கோயில் புனிதம் கெட்டுவிடும் உடனே இங்கிருந்து கிளம்பு’ என்று வெண்பாவிற்கு பல்பு கொடுக்கிறார். அத்துடன் பாரதியையும் வெண்பா உடன் சேர வேண்டாம் என்றும் அறிவுரை கூறுகிறார்.

bharathikannamma-cinemapettai7
bharathikannamma-cinemapettai

எனவே மீண்டும் மீண்டும் கண்ணம்மாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்று வெண்பா பல்பு வாங்குவது சின்னத்திரை ரசிகர்களுக்கு சந்தோசத்தை தருகிறது. அத்துடன் வரும் வாரத்தில் கண்ணம்மா தன்னுடைய பிறந்த நாளன்று லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை சொல்லுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை