எதிர்பாராததை நடத்திக் காட்டும் பிக் பாஸ் ஆண்டவர்.. அதிக பிரசங்கித்தனத்தால் வெளியேறும் போட்டியாளர்

நாளுக்கு நாள் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏகப்பட்ட கலாட்டாவும் சண்டைகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆக்ரோஷமாக திரிந்து கொண்டிருந்த போட்டியாளர்கள் இப்போது படு உக்கிரமாக இருப்பது நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

அதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் அசீம், விக்ரமன், கதிரவன், ஆயிஷா, செரினா ஆகியோரில் செரினாவுக்கு தான் மிகக் குறைந்த ஓட்டுகள் கிடைத்து இருக்கிறது.

Also read : பிக் பாஸ் வீட்டில் சாக்கடையில் முங்கிய விக்ரமன்.. ஓவர் மணி நேரத்தில் ட்ரெண்டான சம்பவம்

ஏனென்றால் சென்ற வாரம் ஒரு சிறு விஷயத்திற்காக அவர் ஆஸ்கர் நாயகி ரேஞ்சுக்கு சீன் போட்டது ரசிகர்களை மிகுந்த வெறுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அதனாலேயே அவருக்கு ஓட்டுகள் மிகவும் குறைந்துள்ளது. அதனால் இந்த வாரம் அவர்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் மக்கள் எதிர்பார்த்ததை செய்து விட்டால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியே கிடையாது. அதனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வசனத்திற்கு ஏற்ப தற்போது மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்று எலிமினேஷனில் நடந்திருக்கிறது. அதாவது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது செரினா கிடையாது.

Also read : நான் அப்படிப்பட்ட காம கோளாறு கிடையாது.. முதல்முறையாக வெளிவந்து ரகசியத்தை உடைத்த அசல்

அவருக்கு பதிலாக பிக்பாஸ் வீட்டிலும், ஆண்டவரின் முன்னிலையிலும் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொண்ட ஆயிஷா தான் வெளியேற இருக்கிறார். கடந்த வாரம் இவர் கமலையே எதிர்த்து ஓவராக குரல் கொடுத்தார். இது சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் ஆயிஷாவுக்கு எதிராக கமல் ரசிகர்கள் கொந்தளித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இதுதான் தற்போது ஆயிஷாவிற்கு ஆப்பாக முடிந்திருக்கிறது. ஏற்கனவே கடந்த சீசனில் நடிகர் சரவணன் இதுபோன்ற காரணத்திற்காகத்தான் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது ஆயிஷாவும் தன்னுடைய ஓவர் ஆட்டிடியூட்டால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். இந்த செய்தி ஒரு சில ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும், கமல் ரசிகர்கள் அவர் வெளியேற வேண்டியவர் தான் என்று கூறி வருகின்றனர்.

Also read : விக்ரமனை டார்கெட் செய்த பஜாரிகள்.. டிஆர்பிக்காக நடந்த சண்டை, ஆரிக்கு பின் பெருகும் ஆதரவு

- Advertisement -