சில்க் ஸ்மிதாவின் கடைசி கடிதம்.. மரணிக்கும் போதும் இவ்வளவு ரணமா?

சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து நாம் படங்களில் நடித்து வந்தால் மட்டுமே ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும். ஆனால் சில்க் ஸ்மிதா இறந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய வசீகரத் தோற்றமும், மயக்கும் கண்களும் இன்னும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.

சில்க் ஸ்மிதா சினிமாவுக்கு வந்த மிக குறுகிய காலத்திலேயே ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் உச்சத்தில் இருந்தார். அப்போது வெளியாகும் படங்களில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சில்க் ஸ்மிதா நடித்தால் போதும் அந்த படம் மாபெரும் ஹிட். அதுவும் சில காட்சிகளில் மட்டும் சில்க் ஸ்மிதா நடித்தால் போஸ்டரில் அவரது புகைப்படம் கண்டிப்பாக இடம்பெறும்.

அப்போது சில்க் ஸ்மிதாவை வைத்து பல பிரபலங்கள் சம்பாதித்து வந்தனர். அந்த காலகட்டத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் சில்க் ஸ்மிதா கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர். அவ்வாறு சில்க் ஸ்மிதா உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே அவருடைய தற்கொலை பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் தற்போது சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஒரு நடிகையாக நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னை யாருக்குமே பிடிக்கவில்லை. இங்கு பலர் என்னுடைய உடலையும், உழைப்பையும் பயன்படுத்திக் கொண்டனர்.

ஒருவர் எனக்கு வாழ்க்கை கொடுப்பதாக சொல்லி ஐந்து வருடமாக ஏமாற்றி வருகிறார். மேலும், நான் சம்பாதித்த சொத்தில் பாதியை பாபுவுக்கு கொடுக்க வேண்டும். அவரை நான் உண்மையாக நேசித்தேன். ஆனால் அவரும் என்னை ஏமாற்றிவிட்டார், கடவுள் இருந்தால் கண்டிப்பாக அவர் தண்டிக்கப்படுவார்.

மேலும் எனக்கு நடந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. இதற்கு மேலும் இந்த உலகில் என்னால் வாழ முடியாது. நான் எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்திருக்கிறேன். ஆனால் என்னை மரணத்திற்கு தள்ளி விட்டுள்ளார்கள் என சில்க் ஸ்மிதா மரணிக்கும் போதும் தனது மனதில் உள்ள ரணமான விஷயங்களை கடிதத்தில் எழுதியுள்ளார்.

Next Story

- Advertisement -