குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய ஐட்டம் டான்ஸ் நடிகை.. உன் சங்காத்தமே வேண்டாம் என நடையை கட்டிய மனைவி

இந்த நடிகரைப் பற்றி ஒரு கிசுகிசு கூட வந்த இல்லை என மனைவி பெருமிதம் கொண்டு இருந்த நிலையில் இப்போது பூதாகர பிரச்சனை வெடித்துள்ளது. அதாவது கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்த அந்த வாரிசு நடிகர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குடும்பம், குழந்தை என்று ஆகிவிட்டது.

சினிமாவை பொருத்தவரையில் அந்த நடிகருக்கு மிகப்பெரிய மவுசு இருந்து வருகிறது. டாப் ஹீரோயின்கள் எல்லாம் அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று வரிசையில் நிற்கிறார்கள். அதுமட்டும்இன்றி அவரை வளைக்க பல நடிகைகள் திட்டம் போட்டாலும் அவரிடம் செல்லுபடி ஆகவில்லை.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

இப்படி இருந்த மனுஷன் தற்போது சுத்தமாக மாறிவிட்டாராம். அதாவது இப்போது வரலாற்று படம் ஒன்றில் நடித்து வரும் ஹீரோ தன்னுடன் நடிக்கும் ஹீரோயினிடம் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம். ஐட்டம் டான்ஸ் நடிகையான அவர் இப்போது கதாநாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை லிப் லாக், நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டிருந்த ஹீரோ அந்த நடிகையை பார்த்தவுடன் அவற்றையெல்லாம் தகர்த்து விட்டாராம். இது மனைவியின் காதுக்கு செல்ல அவரே நேரடியாக படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது கணவரின் சுயரூபம் தெரிந்து கண்டித்துப் பார்த்திருக்கிறார். ஆனாலும் அந்த ஹீரோ திருந்திய பாடு இல்லை. ஆகையால் இனி உன் சங்காத்தமே வேண்டாம் என்று தனது பிள்ளைகளுடன் அம்மா வீட்டுக்கு நடையை கட்டி விட்டாராம். ஆனால் வெளியில் குழந்தைகள் படிப்புக்காக வேறு ஊருக்கு சென்றதாக நடிகர் கூறி வருகிறாராம்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

Next Story

- Advertisement -