விஜய் சேதுபதியின் இமேஜை சீண்டி கலாய்த்த சம்பவம்.. மணக்குறையை கொட்டிய மகாராஜா

Vijay Sethupathi: திறமை இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு என்று சொல்வதற்கு ஏற்ப குறுகிய காலத்திற்குள் உச்சாணி கொம்புக்கு வந்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களை ஏற்று தற்போது அனைத்து பக்கங்களும் இவரை பற்றி பேசும் அளவிற்கு ஜெயித்து காட்டியிருக்கிறார். அதிலும் ஒரு வருடத்திற்கு 10 படங்களை கையில் வைத்துக்கொண்டு சுற்றியவர்.

இவருடைய எதார்த்தமான நடிப்புக்கு அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டது போல வில்லனாக நடிப்பதற்கு சம்பளம் அதிகமாக கிடைத்ததும் அதிலும் இறங்கி தான் பார்ப்போமே என்ன நடக்கப்போகிறது என்று தெனாவட்டுடன் இறங்கினார். அதற்கேற்ற மாதிரி அதில் பெரும் புகழும் கிடைத்து சம்பளமும் அதிகமாக கிடைத்தது.

ஆனால் உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா என்று சொல்வதற்கு ஏற்ப ஹீரோ இமேஜ் காலி ஆகிவிட்டது. இதனால் ஒரு கட்டத்தில் சுதாகரித்துக் கொண்ட விஜய் சேதுபதி இனி வில்லன் கேரக்டருக்கு நோ என்று ரெட் சிக்னல் காட்டி விட்டார். இதனால் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக ஹீரோவாக மட்டும் கமிட் ஆகி நடித்துக் கொண்டு வருகிறார்.

சைடு கேப்பில் ஆசையை வெளிப்படுத்திய விஜய் சேதுபதி

அந்த வகையில் பல படங்களுக்கு பின் தற்போது அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா படம் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த ஒரு படத்தை முழுமையாக நம்பிக்கொண்டு வெற்றி பெற்றுவிடும் என்ற நோக்கத்தில் பிரமோஷனுக்கு படு சுட்டியாக வேலை பார்த்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் துபாயில் புர்ஜ் கலிஃபாவில் மகாராஜா போஸ்டர் வெளியிட்டு ஜொலித்தார்.

இதனை தொடர்ந்து இங்கேயும் பத்திரிகையாளர்களை சந்தித்து மகாராஜா மொத்த டீமும் பிரமோஷன் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் இதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி இடம் பத்திரிகையாளர் பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள். அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி விஜய் சேதுபதியின் ஹீரோ இமேஜை சீண்டும் அளவிற்கு கலாய்க்கப்பட்டிருக்கிறார்.

அதாவது நீங்கள் நடித்த படங்களில் 200 கோடி 1000 கோடி என வசூலை பார்த்து பெரிய அளவில் வளர்ந்துட்டீங்களே என்று மாஸ்டர் மற்றும் ஜவான் படங்களில் வில்லனாக நடித்ததை குத்திக்காட்டும் வகையில் கேள்வி முன் வைத்திருக்கிறார். அப்படி என்றால் நீங்கள் ஹீரோவாக நடித்த படம் எதுவும் இந்த அளவிற்கு வெற்றி பெற லாயக்கில்லை. வில்லனாக நடித்தால் மட்டும்தான் உங்கள் படம் கோடிக்கணக்கை தொடும் என்ற அர்த்தத்தில் கேள்வியை கேட்டு பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.

உடனே விஜய் சேதுபதி எமோஷனலாகி அவருடைய மனக்கவலையை கொட்டும் விதமாக 200 கோடி 1000 கோடி எல்லாம் நான் இன்னும் பார்க்கலை. இங்கே என்னுடைய படத்துக்கு அட்வான்ஸ் தவிர வேறு எதுவும் நான் வாங்காமல் தான் நடித்துக் கொடுத்து வருகிறேன். சில படங்களில் சம்பளம் கூட சரியாக நான் வாங்கவில்லை. அதுவும் தயாரிப்பார்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு நான் சம்பளத்தை கண்டு கொள்ளவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது இவருடன் நிலைமை எப்படி இருக்கிறது என்றால் எப்படியாவது மகாராஜா படம் மக்களை கவர்ந்து ஹீரோ என்ற இமேஜை பதித்து, விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் தற்போது நடிகராக தயாரிப்பாளராக பயணித்து வரும் இவருக்கு வருங்காலத்தில் ஒரு இயக்குனராகவும் படத்தை எடுக்க வேண்டும் என்று ஆசை இருப்பதையும் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் இவருடைய ஆசைக்கும் மகாராஜா படம் வெற்றி அடையவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

இமேஜை தக்க வைக்க போராடும் விஜய் சேதுபதி

Next Story

- Advertisement -