தங்கமயிலின் முகத்திரையை கிழிக்க பாண்டியனின் மச்சான் கொடுத்த ஐடியா.. ஒத்து வராத கதிரின் அப்பா

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா வேலை விஷயமாக செந்திலை கூட்டிட்டு சென்னைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்கு சம்மதம் கொடுக்காமல் பாண்டியன் கொஞ்சம் ஓவராக கெத்து காட்டுகிறார். இதனால் கவலையுடன் இருக்கும் மீனாவை கோமதி சமாதானப்படுத்தி நீங்கள் இரண்டு பேரும் போயிட்டு வாங்க. நான் அவரிடம் சம்மதம் வாங்குகிறேன் என்று சொல்லிவிட்டார்.

அதன்படி பாண்டியன் கடையின் வரவு செலவுகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கோமதி நைசாக பேசுகிறார். அப்பொழுது மீனா முதன்முதலாக ஆசைப்பட்டு நம்மிடம் கேட்டது சென்னைக்கு வேலை விஷயமாக போக வேண்டும் என்பதுதான். அதுமட்டுமில்லாமல் கல்யாணமானதிலிருந்து அவர்கள் தனியா எங்கேயும் போகவில்லை.

பொய் பித்தலாட்டம் பண்ணும் தங்கமயில்

தற்போது இது ஒரு சான்ஸாக வைத்து போயிட்டு வரட்டும் என்று கோமதி பாண்டியனிடம் கேட்கிறார். ஆனால் பாண்டியன் சம்மதம் கொடுக்காமல் அதுக்கு இன்னும் டைம் இருக்கு யோசிச்சு சொல்றேன் என்று சொல்லிவிட்டார். அந்த சமயத்தில் பாண்டியனின் மச்சான் திடீரென்று திருடன் திருடன் என்ற கூச்சல் இடுகிறார்.

இதை கேட்டதும் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து திருடனை தேடுகிறார்கள். ஆனால் காணவில்லை என்றதும் தூங்கப் போய் விடுகிறார்கள். ஆனால் இதுதான் சான்சு என்று தங்கமயில், சரவணன் இடம் திருடன் நம்மிடம் நகையைத் திருடிட்டு போயிட்டா என்ன ஆகும் என்று சொல்லி நகையை அனைத்தையும் அம்மா வீட்டில் போய் வைக்கிறேன் என்று தங்கமயில் சொல்கிறார்.

ஆனால் சரவணன் அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தங்கமயிலிடம் ரொமான்ஸ் ஆக பேசுகிறார். பிறகு காலையில் கோமதி எழுந்து பார்க்கும் பொழுது சில பாத்திரங்கள் காணவில்லை என்று புலம்புகிறார். அத்துடன் வழக்கம்போல் வட்டமேசை மாநாடு நடக்கிறது. அந்த சமயத்தில் கோமதி அனைவரது நகையும் நம் வீட்டில் தான் இருக்கிறது.

அதனால் அதை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார். உடனே தங்கமயில் பேங்க் லாக்கரில் வைத்து விட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்கிறார். அத்துடன் எங்க அம்மாவிடம் லாக்கர் இருக்கிறது என்னுடைய நகையை நான் கொண்டு போய் அங்கே வைத்து விடுகிறேன் என்று சொல்கிறார். இதை கேட்ட பாண்டியன் கோமதி இடமும் லாக்கர் இருக்கிறது.

அதனால் அனைவரும் அதிலேயே வைத்துவிடலாம் என்று சொல்லி தங்கமயில் மூஞ்சியில் கரியை பூசி விடுகிறார். ஆனால் இதைக் கேட்ட பாண்டியனின் மச்சான் லாக்கர்ல வச்சா கூட பாதுகாப்பு கிடையாது. அடகு வச்சுட்டோம்னா அதன் மூலம் பணம் கிடைக்கும். நாம் வியாபாரத்தையும் அதிகரிக்கலாம். அங்க வைத்தால் ரொம்பவே பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் தங்கமயில் அடகு வைத்தால் நம்முடைய சாயம் வெளுத்து விடுமே என்ற பயம் வந்துவிட்டது. உடனே நகை எல்லாம் அடகு வைக்கணுமா என்று பதட்டத்துடன் கேட்கிறார். ஆனால் பாண்டியன், மச்சான் சொன்னபடி அப்படி வச்சாவது தங்கமயில் பற்றி உண்மை தெரியவரும். ஆனால் அதையும் கெடுக்கும் விதமாக பாண்டியன் அதுக்கு இப்ப என்ன அவசியம் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.

கோமதியின் லாக்கரிலேயே வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக அனைவரின் நகையும் கோமதி வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது தங்கமயில் அவருடைய நகையை கொண்டுட்டு வந்து கொடுக்கும்போது நகையை உரசி பார்க்க மாட்டாங்களா என்று கேட்கிறார்.

உடனே கோமதி ஏன் எப்ப பார்த்தாலும் உரசுகிறத பத்தியே பேசுகிறாய் என்று கேட்கிறார். அதற்கு தங்கமயில் எங்க அம்மா கஷ்டப்பட்டு வாங்குன நகைகள் அதை உரசினால் கஷ்டமாக இருக்கும் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். அந்த வகையில் இப்பொழுது தங்கமயில் பற்றிய உண்மை யாருக்கும் தெரிய வர வாய்ப்பில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸில் முந்தைய சம்பவங்கள்

- Advertisement -