16 வருடத்தில் 450 படங்கள், சிலுக்குக்கு மறுக்கப்பட்ட கௌரவம்.. மலைக்க வைக்கும் காரணம்

Actress Silk Smitha: சில்க் என்ற ஒற்றை வார்த்தை இப்போதும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு கவர்ச்சி நடிகை இந்த அளவுக்கு பேரும், புகழும் பெற முடியுமா என்று கேட்டால் அதற்கான பதில் சில்க் ஸ்மிதாவாக மட்டும் தான் இருக்க முடியும்.

அந்த அளவுக்கு இறந்த பிறகும் தன்னுடைய புகழை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பெருமை இவருக்கு இருக்கிறது. ஆண்களை மட்டுமல்லாமல் பெண்களையும் கூட ரசிக்க வைக்கும் இவருடைய அழகையும், வசீகரத்தையும் 80 காலகட்ட ரசிகர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள்.

Also read: சில்க் மறைவிற்குப் பிறகும் வசூலை வாரி கொடுத்த 5 படங்கள்.. தியேட்டரை ஈ போல் மொய்த்த கூட்டங்கள்

அந்த வகையில் நடிக்க வந்த 16 வருடங்களில் 450 படங்கள் வரை நடித்திருக்கும் இவருக்கு ஒரு விருது கூட கிடைத்ததில்லை என்பது தான் சோகம். இதனைக்கும் பல படங்களின் வெற்றிக்கு இவருடைய ஐட்டம் பாடல் ஒன்றே முழு காரணமாக இருந்திருக்கிறது.

ஆனாலும் இவருக்கு ஒரு விருதை கொடுத்து அங்கீகரிக்க யாரும் முன் வரவில்லை. ஏனென்றால் சினிமாவில் அரைகுறை ஆடையோடு தரிசனம் கொடுத்தாலும் நிஜ வாழ்க்கையில் இவர் ஆண்களை தன் கண்ணசைவில் தள்ளி நிறுத்தும் குணம் கொண்டவர்.

Also read: சில்க் கடித்த ஆப்பிளை ஏலம் விட்ட தயாரிப்பாளர்.. ஒரு கடிக்கு இவ்வளவு விலையா.?

அதனாலேயே சில பெரும் புள்ளிகளின் ஈகோ தூண்டப்பட்டிருக்கிறது. இதுவும் இவருக்கான விருது என்ற கௌரவம் மறுக்கப்பட்டதற்கு ஒரு காரணம். ஆனால் சில்க் இதைப் பற்றி எல்லாம் ஒரு போதும் கவலைப்பட்டது கிடையாது.

அந்த குணம் தான் அவரை பல சமயங்களில் திமிர் பிடித்தவராகவும் காட்டி இருக்கிறது. ஆனால் மிகச் சில நபர்களுக்கு மட்டுமே சில்க் எப்படிப்பட்டவர் என்பது தெரியும். அந்த வகையில் தன்னுடைய உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் ரசிகர்களை தன் நடனத்தின் மூலம் சந்தோஷப்படுத்துவதையே வாழ்நாள் ஆசையாக கொண்டிருந்தார் இந்த கனவு நாயகி.

Also read: கவர்ச்சி கன்னியாக மட்டும் பார்க்கப்பட்ட சில்க் ஸ்மிதா.. இரண்டே படத்தில் தூக்கிவிட்ட இயக்குனர்

- Advertisement -