புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கவர்ச்சி கன்னியாக மட்டும் பார்க்கப்பட்ட சில்க் ஸ்மிதா.. இரண்டே படத்தில் தூக்கிவிட்ட இயக்குனர்

Actress Silk Simtha: சில்க் என்றாலே கவர்ச்சி நடிகை என்று தான் பார்க்கப்பட்டு வந்தார். படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் ஆடினால் போதும் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அவருடைய வசீகர தோற்றம் மற்றும் காந்த பார்வை இதற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அதிலும் சகலகலா வல்லவன் படத்தில் நேத்து ராத்திரி யம்மா, தூக்கம் போச்சுடி யம்மா என்ற பாடலுக்கு கமலுடன் நடனம் ஆடி இருந்தார்.

இந்த பாட்டு தான் அப்போது உள்ள இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சில்க் வீட்டு வாசலில் காத்து கிடந்தனர். இதற்கு காரணம் படத்தில் ஒரே ஒரு காட்சியில் சில்க் வந்துவிட்டால் போதும் அந்த படம் கிட்டத்தட்ட 90% வெற்றி என்ற நிலைமை தான் அப்போது இருந்தது.

Also Read : சில்க் மறைவிற்குப் பிறகும் வசூலை வாரி கொடுத்த 5 படங்கள்.. தியேட்டரை ஈ போல் மொய்த்த கூட்டங்கள்

அந்த அளவுக்கு கனவு கன்னியாக, கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த சில்க்கை வேறுவிதமாக காட்ட ஆசைப்பட்டவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அதாவது தன்னுடைய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் கார்த்திக், ராதா இருவரும் தான் முதன்மை ஆன கதாபாத்திரம் என்றாலும் தியாகராஜனின் மனைவியாக சில்க்கை நடிக்க வைத்திருந்தார்.

இந்த படத்தில் குடும்ப பெண்ணாக புடவையுடன், வலுவான கதாபாத்திரத்தில் சில்க்கை வேறு விதமாக பாரதிராஜா காட்டி இருந்தார். இதுதான் கவர்ச்சி மட்டும் சிலுக்கு வரும் என்பதை உடைத்து எறிந்த படம். இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தெலுங்கில் சீதாக்கோக சில்லக்கா என்ற பெயரில் எடுக்கப்பட்டிருந்தது.

Also Read : சில்க் கடித்த ஆப்பிளை ஏலம் விட்ட தயாரிப்பாளர்.. ஒரு கடிக்கு இவ்வளவு விலையா.?

இந்த படத்தில் தமிழில் நடித்த பல பிரபலங்கள் அப்படியே தெலுங்கிலும் நடித்திருந்தனர். ஆனால் தியாகராஜன் நடித்த கதாபாத்திரத்தில் சரத் பாபு நடித்து இருந்தார். அதிலும் அவரது மனைவியாக சில்க் நடித்து அசத்து இருந்தார். அதுவும் இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் சிலுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்தப் படத்தால் இப்போது வரை சிலுக்கு அங்க மவுசு இருந்து வருகிறது. இவ்வாறு பாரதிராஜா சில்க்கின் அடையாளத்தை மாற்றி மரியாதை ஏற்படுத்தும் விதமாக படத்தை கொடுத்திருந்தார். மேலும் இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் சில்க்கின் பெயர் மற்றும் புகழ் அழியாது.

Also Read : அட இவங்க தான் சில்க்கின் ஜெராக்ஸ் காப்பி.. வைரலாகும் மார்க் ஆண்டனி பிரியாவின் புகைப்படங்கள்

- Advertisement -

Trending News