நயன் 75-வது படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? 10 வருடங்களுக்குப் பின் இணையும் எவர்கிரீன் ஜோடி

ஐயா படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது டாப் ஹீரோயின் ஆக கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது பாலிவுட்டிலும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் தடம் பதித்துள்ளார்.

மேலும் நயன்தாராவின் 75-வது படத்தைக் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. நயன் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகு தன்னுடைய கெரியர் பாதிக்காத வகையில் வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார்.

Also Read: அட்லீ மேல் விழுந்த மொத்த பழி.. பதான் செய்த வேலையால் டார்ச்சர் கொடுக்கும் ஷாருக்கான்!

தற்போது நயன்தாரா அட்லி இயக்கும் ஜவான் என்கின்ற பாலிவுட் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 75 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சார்பட்டா பரம்பரை 2 படத்தை தயாரிக்க உள்ள நாத் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்க, அறிமுகம் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார்.

இந்த படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு எளிமையாக போடப்பட்டது. இந்த படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக யார் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 10 வருடத்திற்கு முன் அட்லியின் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ராஜா ராணி படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடித்த நடிகர் ஜெய் தான் நயன் 75 படத்திலும் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.

Also Read: நம்ப வைத்து மோசம் செய்த அஜித்.. பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவிடம் தஞ்சமடைந்த விக்னேஷ் சிவன்

ராஜா ராணி படத்தில் இந்த ஜோடியை விரும்பி ரசித்தார்கள். இந்த எவர்கிரீன் ஜோடி 10 வருடத்திற்குப் பின் மறுபடியும் இணைகிறது என்ற தகவலை அறிந்ததும் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் நயன் 75 படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்ல்லி ஆகியோரும் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருடமே நிறைவடைந்து இந்த ஆண்டின் இறுதியிலேயே படத்தை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது.

Also Read: நயன்தாராவுக்காக பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய்சேதுபதி.. பழக்கத்திற்காகவே இறங்கி செய்யும் காரியம்

- Advertisement -